
Cinema News
தளபதி விஜயை அசிங்கப்படுத்திய சன் பிக்ச்சர்ஸ்.! கடும் கோபத்தில் ரசிகர்கள்.!
தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்திற்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது, அப்படம் வெளியாகவிருந்த சமயத்தில் ரிலீசாக இருந்த கேஜிஎஃப்-2 திரைப்படத்திற்கு அவ்வளவு எதிர்பார்ப்பு எதுவும் இல்லை.
ஆனால், ரிலீசான பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப்போனது. பீஸ்ட் திரைப்படம் முதல் ஐந்து நாட்களுக்கு முன் பதிவு செய்யப்பட்டதால், திரையரங்குகளில் நன்றாக ஓடி வசூல் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில், கே.ஜி.எப்-2 திரைப்படம் குறைவான திரையரங்குகளில் ரிலீஸ் ஆனாலும் மக்களின் வரவேற்பு காரணமாக நாளுக்கு நாள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் விளம்பரத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட்டர் நிறுவனத்திடம் சேர்ந்து பீஸ்ட் திரைப்படத்திற்காக ஸ்பெஷலான இமோஜி எனப்படும் ஒரு சிறிய புகைப்படத்தை அறிமுகப்படுத்தியது. பீஸ்ட் என ட்விட்டரில் ஹேஸ்டேக் போட்டிருந்தால் இந்த சிறிய ஈமோஜி வந்துவிடும்.
ஆனால், படம் ரிலீஸ் ஆகி பத்து நாள் தான் ஆகியுள்ளது. அதற்குள் இந்த இமோஜியை டிவிட்டர் நிறுவனம் நீக்கி விட்டதாம். சன் பிக்சர்ஸும் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது.
இதையும் படியுங்களேன் – காத்துவாக்குல குண்டை தூக்கிப்போட்ட நயன்தாரா காதலர்.! சேதுபதி நிலைமை.?!
இதனை பார்த்த ரசிகர்கள் படம் வெளியாகி கொஞ்ச நாளிலேயே இந்த மாதிரியான இமோஜியை நீக்கியது வருத்தமாக இருக்கிறது என்று ட்விட்டரில் புலம்பி வருகின்றனர். என்னதான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், தங்களது ஆஸ்தான நாயகனுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை தற்போது குறைந்துள்ளதால் ரசிகர்கள், தயாரிப்பு நிறுவனம் மீது வருத்தத்தில் உள்ளனராம்.
இருந்தாலும், இந்த தோல்வியை எதிர் கொண்டு அடுத்தடுத்து திரைப்படங்களில் மீண்டும் பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்து மீண்டும் தான் ஒரு உச்ச நட்சத்திரம் என்பதை நிச்சயம் தளபதி விஜய் நிரூபிக்க தான் போகிறார்.