Connect with us

பக்கா அரசியல்வாதி லுக்கில் முதலமைச்சரை சந்தித்த தளபதி விஜய்.! தீயாய் பரவும் லேட்டஸ்ட் வீடியோ..,

Cinema News

பக்கா அரசியல்வாதி லுக்கில் முதலமைச்சரை சந்தித்த தளபதி விஜய்.! தீயாய் பரவும் லேட்டஸ்ட் வீடியோ..,

பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு சூப்பர் ஹிட் இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தெலுங்கு பிரமாண்ட தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.

 

இது சமீபகாலமாக விஜய் நடித்து வந்த ஆக்சன் கமர்சியல் கதைக்களங்களில் இருந்து மாறி, முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகும் படம் என கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல இப்படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், யோகி பாபு, ஷியாம் என ஒரு பட்டாளமே நடிக்கிறது.

விஜய்க்கு ஹீரோயினாக முதன் முறையாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக திட்டமிடப்பட்டு பட அறிவிப்புகளில் குறிப்பிடவும் செய்துவிட்டனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதிராபத் என நடந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் செட் அமைத்து பாடல் ஷூட்டிங் செய்தனர். தற்போது படக்குழு ஹைதிராபத் சென்றுள்ளது.

இதையும் படியுங்களேன் – உதயநிதி தயாரிப்பில் விஜய்.!? நான் எதையும் ‘மிரட்டி’ வாங்கலனு வேற சொல்லிருக்காரே இந்த மனுஷன்.!

இந்நிலையில், ஹைதிராபாத் சென்றுள்ள தளபதி விஜய் அங்குள்ள தெலுங்கானா முதலமைச்சர் சந்ரசேகர் ராவ் அவர்களை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், விடீயோக்களும் வைரலாக பரவி வருகிறது. அதில் விஜய் வெள்ளை சட்டையுடன் பக்கா அரசியல்வாதி போல இருக்கிறார்.

இதுவும் வழக்கம் போல மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என விஜய் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top