ஜெய்யை பாராட்டிய டான்ஸ் மாஸ்டர்… பங்கமாய் கலாய்த்த தளபதி விஜய்… தரமான சம்பவம்…
“சென்னை 28” திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவர் ஜெய். “சென்னை 28” திரைப்படத்தை தொடர்ந்து அவர் நடித்த “சுப்ரமணியபுரம்” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
அதன் பின் “வாமணன்”, “கோவா”, “எங்கேயும் எப்போதும்”, “ராஜா ராணி”, “வடகறி”, “கலகலப்பு 2” என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் ஜெய். சமீபத்தில் கூட ஜெய் நடித்த “காஃபி வித் காதல்” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
நடிகர் ஜெய் “சென்னை 28” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானாலும் அவர் முதன்முதலில் அறிமுகமாகிய திரைப்படம் “பகவதி”. இத்திரைப்படத்தில் ஜெய், விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் “பகவதி” திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் ஜெய். அதில் “பகவதி படத்தில் நடித்தபோது எனக்கு சின்ன வயசுதான். அதுதான் முதல் படம். ஆக்சன் என்று இயக்குனர் சொன்னால், நான் கேமராவை பார்க்கமாட்டேன், இயக்குனரைத்தான் பார்ப்பேன்.
உடனே இயக்குனர் ‘ஆக்சன் என்று சொன்னால் கேமராவைத்தான் பார்க்கனும், என்னை பார்க்ககூடாது’ என்பார். இது போல் பல தவறுகளை செய்வேன். முதல் வாரத்திலேயே விஜய்க்கு டார்ச்சர் கொடுக்க துவங்கிவிட்டேன்” என நகைச்சுவையாக கூறினார்.
இதையும் படிங்க: “எனக்கு விருது கொடுப்பதை முதலில் நிறுத்துங்கள்”… பொங்கி எழுந்த கமல்… காரணம் என்ன தெரியுமா?
மேலும் பேசிய ஜெய், “பகவதி திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கும்போது கடைசியாக ஒரு பாடலை படமாக்கினார்கள். அதில் எனது கையில் ஒரு கித்தார் இருந்தது. நடன இயக்குனரான பிருந்தா மாஸ்டர் கேமரா முன் கித்தாரை திருப்ப சொன்னார். நான் சரியாக செய்தேன். உடனே பிருந்தா மாஸ்டரின் அசிஸ்டென்ட் என்னை கற்பூர புத்தி என பாராட்டினார். அப்போது அருகில் இருந்த விஜய் ‘படமே முடியப்போகுது’ என கலாய்த்தார்.” என்று அப்பேட்டியில் மிகவும் கலகலப்பாக தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.