Cinema News
விஜய் படமாக இருந்தா என்ன.? நான் நடிக்க மாட்டேன்… அடம்பிடித்த மைக் மோகன்…
ஒரு காலத்தில் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 80 களில் முன்னணி நட்சத்திரங்களுக்கே டஃப் கொடுத்த நடிகர் என்றால் அது மைக் மோகன் தான். இவர் மட்டும் சொந்த குரலில் டப்பிங் பேசி இருந்தால் இன்னும் பல ஆண்டுகள் சினிமாவில் ஜொலித்து இருப்பார்என்றே கூறுவார்கள்.
இவருக்கு பெரும்பாலான படங்களில் சுரேந்தர் என்பவர் தான் குரல் கொடுத்து வந்தார். பின்னர் அவருக்கும் – மோகனுக்கும் பிரச்சனை வரவே, பல சூப்பர் ஹிட் தொடர்ந்து, தானே டப்பிங் பேச தொடங்கியதும் ரசிகர்களுக்கு குழப்பமாக, படம் அனைத்தும் பிளாப் ஆகிவிட்டது.
அவரே சொந்த படம் எடுத்தும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. இருந்தும், மற்ற ஹீரோ படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடிக்க ஆஃபர் வந்துள்ளது. ஆனால், நான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறி அனைத்தையும் மறுத்துவிட்டார்.
இதையும் படியுங்களேன் – கவுண்டமணியை நம்ப வைத்து ஏமாற்றிய சிம்பு.! அந்த சம்பவத்தால் சிவகார்த்திகேயனுக்கு சிக்கல்…
நீண்ட வருடம் நடிக்காமல் இருந்த மோகனுக்கு அண்மையில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தில் மூத்த அண்ணன் வேடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மீண்டும் அதே முடிவை தெரிவித்து நிராகரித்து விட்டார் மைக் மோகன். தற்போது மைக் மோகன் ஹீரோவாக ஹரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.