Connect with us

தளபதி 66-ஐ மீம்ஸ் போட்டு கலாய்த்து வரும் நெட்டிசன்கள் .! அப்படி என்னப்பா செஞ்சுட்டாங்க.?

Cinema News

தளபதி 66-ஐ மீம்ஸ் போட்டு கலாய்த்து வரும் நெட்டிசன்கள் .! அப்படி என்னப்பா செஞ்சுட்டாங்க.?

தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெற தவறியதால் அடுத்த படம் நல்ல வெற்றியை பதிவு செய்ய வேண்டியதால், விஜய் தீவிரமாக வேலை செய்து வருகிறார். விஜயின் 66வது திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.

இந்த படம் விஜயின் வழக்கமான ஆக்சன் கமர்சியல் படமாக இல்லாமல், ஒரு பக்கா குடும்ப திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படம் குடும்ப படம் என்பதால், நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு போல, படத்தின் நடிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது.

 

பட பூஜையின் போது, தளபதி விஜய்,  ராஷ்மிகா உடன் சரத்குமார் இருந்தார். அதன் பிறகு பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெய் சுதா ஆகியோர் இணைந்துள்ளார். சங்கீதா, யோகி பாபு, ஷாம் , ஸ்ரீகாந்த்(தெலுங்கு நடிகர்) என நாளுக்கு நாள் லிஸ்ட் பெரிசாகி கொண்டே போகிறது.

இதையும் படியுங்களேன் – 24 வருஷம் கழிச்சி மீண்டும் இறங்கி அடிக்கும் ஆண்டவர்.. செம ட்ரீட் இருக்கு…

இதனை பார்த்த நெட்டிசன்கள், மீம்ஸ் போட்டு செல்லமாய் கலாய்த்து வருகின்றனர். நூறு நாள் வேலை திட்டமா?, அருணாச்சலம் படத்தில் ரஜினி அத்தனையும் வாங்குவது போலவும், சத்யராஜ் – வடிவேலு கிரிக்கெட் போட்டிக்கு ஆள் எடுப்பதை ஒப்பிட்டு என பலவாறு மீம்ஸ் மற்றும் கமெண்ட் பறந்து வருகிறது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top