தளபதி68க்கும் விடாமுயற்சிக்கும் இவ்ளோ ஒற்றுமையா? ரியல் போட்டி ஆரம்பிச்சிருச்சு! அடிமடியில கைவைக்காம இருந்தா சரி

by Rohini |   ( Updated:2023-10-10 06:55:20  )
vijay
X

vijay

Vidamuyarchi: தமிழ் சினிமாவில் அஜித் , விஜய் என இருவரும் மாபெரும் ரசிகர்கள் பலத்தோடு வலம் வரும் நடிகர்கள். தங்களுடைய இடத்தில் இருந்து கொஞ்சமும் மாறாமல் இந்தளவுக்கு உயரத்தை அடைந்தாலும் அதை தன் தலையில் ஏற்றி கொள்ளாமல் அவரவர் வழியில் வந்து கொண்டிருக்கின்றனர்.

தொழில் முனையில் போட்டி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் உண்மையான நட்பு பாராட்டக் கூடிய நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர்களின் படங்களான துணிவு மற்றும் வாரிசு படங்கள் மோதின.

இதையும் படிங்க: கமலை வச்சு பல கோடி லாபம் பார்த்த லைக்கா நிறுவனம்! ‘இந்தியன்2’ டப்பிங்னு நினைச்சிடாதீங்க – இது வேற மாறி

மீண்டும் அப்படிப்பட்ட ஒரு பலமான போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்ததில் அஜித்தின் படத்திற்கு சில சறுக்கல்கள் வந்தது. ஆனால் விஜய் முன்னேறி லியோ படத்தின் ரிலீஸுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

ஆனாலும் மீண்டும் இவர்களின் பந்தயம் ஆரம்பமாகியிருக்கிறது. ஒரு பக்கம் வெங்கட் பிரபுவின் தளபதி 68 படமும் மகிழ் திருமேனியின் விடாமுயற்சி திரைப்படமும் ஒன்றாக ஒரே நேரத்தில் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: விஜய், ரஜினிலாம் ஹீரோக்கள் இல்லை… ஜீரோக்கள்… பொது மேடையில இப்டியா பேசுவீங்க.. கொதித்த பிரபல தயாரிப்பாளர்..!

தளபதி 68 ல் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் ஒரு வேடத்தில் வயசான கேரக்டரிலும் இன்னொரு வேடத்தில் 30, 40 வயது மதிக்கத்தக்க கேரக்டரிலும் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. அதற்கேற்ற வகையில் சினேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி இருண்டு ஹீரோயின்கள் படத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திலும் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறாராம். விஜய் மாதிரியே ஒரு வயசான கெட்டப்பிலும் நடுத்தர வயதில் ஒரு கெட்டப்பிலும் விடாமுயற்சி படத்தில் அஜித் வருகிறாராம். மேலும் த்ரிஷா, ரெஜினா கெசண்ட்ரா என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் இருக்கிறார்களாம்.

இதையும் படிங்க: உங்க படத்தை ஓட வச்சதே நாங்கதான்…நண்பன்னு கூட பார்க்காம வெளுத்து வாங்கிய சிவாஜி…

இதுவல்லவா சரியான போட்டி என ரசிகர்கள் கடைசியில் கதையும் ஒன்றாக எடுத்துவிடாமல் பார்த்துக் கொள்ளவும் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Next Story