தளபதி69 படத்தின் ஹீரோயின்… ஒன்னு இல்ல இரண்டு… மியூசிக்கில கோட்டைய விட்ராதீங்கப்பா!
Thalapathy69: விஜயின் அரசியல் எண்ட்ரிக்கு முன்னர் கடைசி படமாக உருவாக்கப்பட இருக்கும் தளபதி69 படத்தின் சுவாரஸ்ய அப்டேட்கள் இணையத்தில் தொடர்ந்து கசிந்து வருகிறது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தினை நெருங்கிவிட்டது.
இதையும் படிங்க: என்னால அவர் எதிர்காலம் பாதிக்கக் கூடாது.. விஜய் நடிக்க மறுத்த திரைப்படம்..
இப்படத்தினை முடித்த கையோடு விஜய் தளபதி69 படத்தில் கடைசியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தின் இயக்குனர் வேட்டையே பல வாரங்களாக நடந்து வருகிறது. கோலிவுட்டின் பல முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இருந்தனர். கார்த்திக் சுப்புராஜ் முதல் ஆளாக போட்டிக்கு தயாரானார். ஆனால் அவர் வேறு படங்களில் பிஸியாகினார். இதனால் அவர் விஜய் படத்தினை இயக்கவில்லை என்பது தெளிவாகியது.
இதையடுத்து, வெற்றிமாறன் இப்படத்தினை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் சமீபத்திய விருதுவிழா ஒன்றில் விஜய் படத்தினை இயக்குவது இப்போது நடக்கும் விஷயம் இல்லை எனத் தெரிவித்தார். பல இயக்குனர்கள் போட்டியில் இருந்த நிலையில், ஹெச்.வினோத் தான் தற்போது தளபதி69 படத்தினை இயக்க இருக்கிறார். கிட்டத்தட்ட இது உறுதியாகிவிட்ட பட்சத்தில், விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெண் வெளியில் சொல்ல முடியாத அந்த தவிப்பு… அற்புதமான சுகங்களைத் தந்த 80ஸ் மெலடி இதுதான்!