தளபதி70 திரைப்படம் நடக்க போகுதா? விஜயின் அடுத்தக்கட்ட திட்டம் இதுதான்!

thalapathy
Thalapathy70: தளபதி விஜய் தன்னுடைய நடிப்பில் கடைசி திரைப்படமாக ஜனநாயகன் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தளபதி70 நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் நடிகை விஜய். நடிப்பில் கடந்த சில படங்களாகவே அவருக்கு சம்பளம் தொடர்ச்சியாக அதிகளவில் உயர்த்தப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அவருடைய படங்களும் 500 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்த நேரத்தில் விஜய் தன்னுடைய நடிப்பு உலகத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியையும் அறிவித்தார். அதற்கான வேலைகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கொடி அறிமுகம் முதல் மாநில மாநாடு வரை வெற்றிக்கரமாக நடந்தது.

தொடர்ந்து, கட்சி பொதுக்கூட்டமும் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் விஜயின் அரசியல் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு புறமிருக்க தன்னுடைய ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கை இன்னும் சில தினங்களில் விஜய் முடித்துவிடுவார்.
அவர் இன்னும் ஒரு படம் செய்ய மாட்டாரா என பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார். அப்போது அவரிடம் தளபதி70 படத்தில் விஜய் நடிப்பாரா எனக் கேள்வி முன் வைக்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், அது எனக்கு தெரியாது. என்னிடம் சொன்னது. மே மாதத்துடன் படத்தினை முடித்துவிட்டு வாழ்க்கை முழுவதும் அரசியல் மட்டுமே என்றார். அப்போ தளபதி70 எனக் கேட்க, ஜூன் மாதம் பின்னர் ரியல் லைபிலே நிறைய படங்களை பார்க்க போகிறீர்கள் எனச் சொல்லி இருக்கிறார்.
இதனால் தளபதி70 நடக்கும் என வைரலாகி வரும் தகவல் எல்லாம் வதந்தி என்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் செம வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.