
Cinema News
அதிராவுக்கு அட்வான்ஸ் கொடுத்த தளபதி67 டீம்.! கே.ஜி.எப் ‘அந்த’ விஷயத்தை உங்ககிட்ட சொல்லயா.!
தளபதி விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார் முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற்றது. பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட பின் தற்போது ஹைதராபாத் சென்றுள்ளது படக்குழு. இத்திரைப்படம் குடும்ப திரைப்படமாக உருவாகிறது என்று கூறப்படுகின்றது.
தற்போது வெளியான தகவலின்படி தளபதி விஜயின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ்தான் இயக்க உள்ளார் என்பது 90 சதவீதம் உண்மையாகி விட்டது. இப்படத்தில் வில்லனாக நடிக்க கேஜிஎஃப்-2 வில்லன் ‘அதிரா’ சஞ்சய்தத் ஒப்பந்தமாக உள்ளாராம். அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அட்வான்ஸ் வரை கொடுக்கப்பட்டு விட்டது என கூறப்படுகிறது.
இதனை அறிந்த சினிமா வட்டாரங்கள் கேஜிஎப் வில்லன் ‘அதிரா’ சஞ்சய் தத்தை புக் செய்தது தவறில்லை. ஆனால், அந்த விஷயத்தையும் கேட்டு கொள்ளுங்கள் என ஓர் தகவலை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்களேன் – கமலுக்கே விபூதியா.?! அஜித் பட இயக்குனரின் தில்லாங்கடி திட்டம்.! 18 வருட உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.!
அதாவது, சஞ்சய் தத்திற்கு தற்போது வயது ஆகி விட்டது. அதன் காரணமாக கே.ஜி.எப் 2 படத்தில் பெரும்பாலான காட்சிகளில், முக்கியமாக ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில் நடித்தவர் சஞ்சய் தத் கிடையாதாம். அவருக்கு பதிலாக டூப் வைத்ததுதான் படமாக்கினார்களாம். தன்னைப் போலவே இருக்கும் அந்த டூப்பிற்கு மொத்த செலவையும் சஞ்சய் தத்-தான் ஏற்று கொண்டாராம்.
கண்டிப்பாக லோகேஷ் இயக்கும் தளபதி 67 திரைப்படத்தில் ஆக்ரோஷமான சண்டை காட்சிகள் இருக்கும். ஆதலால், இந்த விஷயத்தையும் சேர்த்து பேசி விடுங்கள் என சினிமா வட்டாரங்கள் ஆலோசனை கூறி வருகின்றனர்.