சூப்பர் ஸ்டார் படத்தில் இருந்து தூக்கப்பட்ட தமன்! ஹோட்டல்ல இப்படியா பண்றது?
சினிமாவில் இசையமைப்பாளர் தமன் ஒரு தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக வலம் வருகிறார். பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன் அதன் பிறகு இசையின் மீதுள்ள ஆர்வத்தால் நடிப்பை விட்டுவிட்டு இசையின் மீது தன் கவனத்தை திருப்பினார்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் தமன் விஜயின் வாரிசு படத்திற்கு கூட அவர்தான் இசையமைப்பாளராக பணியாற்றினார். மேலும் விஜயின் தீவிர ரசிகராகவும் இருப்பவர். அந்தப் படத்தில் ரஞ்சிதமே பாடலுக்கு எப்படி விஜயை ஆட வைத்திருப்பார் என்பதை பார்த்திருப்போம்.
இருந்தாலும் தமிழை விட தெலுங்கில் தான் பயங்கர பிஸியாக இருக்கிறார் தமன்.கிட்டத்தட்ட தெலுங்கில் இருக்கும் அனைத்து முன்னனி நடிகர்களின் படங்களுக்கும் இவர்தான் இசையமைத்து வருகிறார். தமிழில் எப்படி அனிருத்தோ அதே போல் தெலுங்கில் தமன் தான் டாப் ஸ்டாராக இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று தமன் போட்ட ஒரு ட்விட்டர் பதிவால் ரசிகர்கள் என்னாச்சு தமனுக்கு என்று கேட்டு வருகின்றனர். அதாவது ஒரு வாழைப்பழத்தின் புகைப்படத்தை பகிர்ந்து எல்லாரும் வயிறு எரிங்க என்று பதிவை பதிவிட்டிருக்கிறார். அதோடு ஒரு மோர் டம்ளரையும் ஷேர் செய்து யாருக்காவது எரிச்சலாக இருந்தால் என்னோட ஆஃபிஸுக்கு வந்து கொஞ்சம் மோர் சாப்பிட்டு விட்டு போங்க என்றும் கூறியிருக்கிறார்.
திடீரென எதுக்கு இந்த பதிவு என விசாரித்ததில் அவர் ஒரு ஹோட்டலில் தங்கி தன் படங்களுக்கான இசைக்கான வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாராம். அதன் பிறகு ஒரு தயாரிப்பாளரை வரவழைத்து ஹோட்டல் பில் 40 லட்சம் தொகையை அந்த தயாரிப்பாளரின் தலையில் கெட்டி விட்டாராம்.
ஆனால் அவர் ஒரே நேரத்தில் ஐந்து படங்களுக்கான வேலையில் ஈடுபடும் போது எப்படி ஒரு தயாரிப்பாளரிடம் மட்டும் அவ்ளோ தொகையை கட்ட வைக்க முடியும், அந்த 40 லட்சம் தொகையை 5 பட தயாரிப்பாளர்களுக்கும் பிரித்து தான் கொடுக்க வேண்டும் அல்லவா? அதனால் அந்த தயாரிப்பாளர் இந்த பணத்தை என்னால் கட்ட முடியாது என சொல்லிவிட்டாராம்.
இதற்கு பதிலடியாகத்தான் தமன் ட்விட்டரில் என் மேல் எல்லாரும் கடுப்பாக இருக்கிறார்கள் என்பதை போல இந்த மாதிரியான புகைப்படங்களை பதிவிட்டு ஷேர் செய்திருக்கிறாராம். இன்னொரு பக்கம் தமனின் இந்த செயலால் கடுப்பாகி போன நடிகர் மகேஷ் பாபு ஏற்கெனவே அவருடைய படத்திற்கு தமன் இசையமைப்பதாக இருந்ததாம். ஆனால் இந்த சம்பவத்துக்கு பிறகு ஜிவி பிரகாஷ்குமாரை மாற்ற சொல்லியிருக்கிறாராம்.