
Cinema News
படத்தின் மொத்த கதையையும் ஒரே வீடியோவில் முடிச்சிவிட்ட தளபதி66 பிரபலம்.! கடுங்கோபத்தில் விஜய்.?
தளபதி விஜய் தற்போது அவரது 66வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். முந்தைய படமான பீஸ்ட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியதால், இந்த முறை அந்த குறை இருக்க கூடாது என வித்தியாசமான முயற்ச்சி மேற்கொள்கிறார்.
இந்த முறை தனது வழக்காமான ஆக்சன் கமர்சியல் பார்முலாவில் இருந்து விலகி வித்தியாசப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறதாம். இப்படத்தை தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். தெலுங்கு பட பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை அண்மையில் அவர் ஒரு பேட்டி கொடுத்து இருந்தார். ஒரு படத்திற்காக பேட்டி எடுக்க சென்று, பல சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் என அப்டேட் அடுக்கிவிட்டு சென்று விட்டார்.
இதையும் படியுங்களேன் – என் அம்மா பட்ட கஷ்டம் வேற யாரும் படக்கூடாது.! AK-61இல் வினோத் செய்ய போகும் சம்பவம் என்ன தெரியுமா.?
மேலும் அவர் தளபதி விஜயின் 66வது பட கதையையும் கூறிவிட்டார். ஒரு பெரிய குடும்பத்தில் இருந்து பிரிந்து வாழும், ஹீரோ குடும்பம் திரும்ப சொந்தத்தை பார்க்க தாய், தந்தை மகன் வருகிறார்கள் அங்கு என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அந்த குடும்பம் என்ன ஆகிறது என்பது பற்றிய பாச கதைக்களம் தான் இது என சொல்லிவிட்டார்.
இப்படி ஒரு வீடியோவில் மொத்த கதையையும் சொல்லிவிட்டாரே, இந்த விஷயம், படக்குழுவுக்கோ, அல்லது தளபதி விஜய்கோ தெரிந்துவிட்டால் கோவிச்சிக்க போறார்கள் என சினிமாவாசிகள் கூறி வருகின்றனர்.