சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் பிக்பாஸ் பிரபலம்!..யாருக்கு ஜோடினு தெரியுமா?...

கமல் தொகுத்து வழங்க விஜய் டிவியில் பிரபலமாக ஓடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். கிட்டத்தட்ட 5 சீசன்களை கடந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6க்கானவேலைகள் நடைபெற்று வருகின்றன.
சீசன் 5ல் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தாமரை செல்வி. கிராமத்தில் இருந்து வந்துதன்னுடைய நாடக திறமையால் வீட்டிற்குள் இருந்த அனைவரையும் கவர்ந்தவர் தன்னுடைய வாயாலும் ரசிகர்களையும்எளிதில் கவர்ந்தார்.
98 நாள்கள் வரை மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்து வந்த தாமரை செல்வி அந்த நாளில் தான் எவிக்ட் ஆகி வெளியே வந்தார். மேலும்கடைசி 5 நாள்கள் எவிக்ட் ஆன போட்டியாளர்கள் உள்ளே போக இவரும் உடன் சென்று 102 நாள்கள் ஃபைனல் வரை இருந்துரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்ததாக தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.ரோபோ சங்கர், சிங்கம் புலி நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனாலும் அதிகாரப்பூர்வ செய்தியாகவரும் வரையில் என்ன படம் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.