இனைக்கு நீங்க தான் ட்ரெண்டிங்... ஆசை மகனை அள்ளி முத்தம் கொடுத்த தாமரை!

by பிரஜன் |   ( Updated:2021-12-24 01:04:12  )
thamarai
X

thamarai

பிரீஸ் டாஸ்க்கினால் எகிறும் TRP... ட்ரெண்டிங்கில் தாமரையின் மகன்!

பிக்பாஸ் வீட்டில் இந்த முறை தான் போட்டியாளர்கள் பிரபலம் இல்லாத வித்யாசமான பல துறைகளில் ஆட்களை தேர்வு செய்தனர். அதில் ஒருத்தர் தான் தாமரை. தெருக்கூத்து நாடகங்களில் நடிக்கும் தாமரை இந்த வீட்டில் போட்டியாளராக கலந்துகொண்டு மற்ற போட்டியாளர்களுக்கு செம டப் கொடுத்து வருகிறார்.

பட்டுக்கோட்டை சொந்த ஊராக கொண்ட இவரது பாஷை கேட்பதற்கு வித்யாசமாக இருந்ததால் தமிழ் ரசிகர்கள் மனதில் வெகு சீக்கிரமே இடம் பிடித்தார். ஆரம்பத்தில் அவரது இன்ஸெண்ட் லுக்கை பார்த்து பாராட்டியவர்கள் பின்னாளில் இவரா இப்புடி என வாய் பிளந்துவிட்டனர். அந்தவகையில் பிக்பாஸ் வீட்டில் யார்? எவ்வளவு பெரிய ஆள் என்றெல்லாம் பார்க்கமாட்டார். அவருக்கு தப்பு என்றால் கத்தி சண்டையிட்டு நியாத்தை அடைவார்.

thamarai

thamarai

இந்நிலையில் திருமணம் ஆகி கணவரை பிரிந்து வாழும் தாமரைக்கு ஒரு மகன் இருக்கிறான். இன்று அவன் ப்ரீஸ் டாஸ்கில் வீட்டில் நுழைய தாமரை கண்களில் குளம் போன்று கண்ணீர் தேங்க மகனை கட்டியணைத்து முத்தமிட்டு பாசத்தினை பொழிந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story