Connect with us
mgr 1

Cinema News

கோழி முட்டைய திருடி எம்ஜிஆர் படம் பார்த்த தம்பி ராமையா.. அப்புறம் நடந்த சம்பவம்தான் ஹைலைட்டு

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராகவும் இயக்குனராகவும் பல ஆண்டுகளாக வலம் வந்து கொண்டிருப்பவர் தம்பி ராமையா. வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் எனும் படத்தை இயக்கியவர் தம்பி ராமையா.  கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மைனா படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினையும் பெற்றுள்ளார் தம்பி ராமையா.

நமது வாழ்வில் இப்படி ஒரு கேரக்டரை நாம் இதுவரை கண்டதில்லையே என்று சொல்லும் அளவுக்கு சில கதாபாத்திரங்கள் அவ்வப்போது நம்மை கிராஸ் செய்வது உண்டு. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்தவர் தம்பி ராமையா. சில கேரக்டர்களை பார்க்கும் பொழுது இதெல்லாம் உயிரோட இருக்கதானா என யோசிக்க வைத்ததும் உண்டு .

அந்த மாதிரி கேரக்டரிலும் நடித்திருக்கிறார். எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு திரையில் வெளிப்படுத்தி ரசிகர்களின் அன்பை பெற்று வருகிறார் தம்பி ராமையா. இந்த நிலையில் அவருடைய வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசிய சம்பவத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் .

இதையும் படிங்க: அந்த விஷயத்தால் ரொம்ப நொந்துப்போன வெற்றிமாறன்!.. வடசென்னை 2 வருமா? வராதா?!..

இவருக்கு வயது 11 இருக்குமாம். அந்தக் காலத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தினத்தில் தான் புதுப்படங்கள் ரிலீஸ் ஆகுமாம். அப்படி எம்.ஜி.ஆர் நடித்த அடிமைப்பெண் படம் ரிலீஸ் ஆக அதை தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் தன் அம்மாவிடம் காசு கேட்டிருக்கிறார். 50 பைசா கேட்டிருக்கிறார் .

ஆனால் அவருடைய அம்மா போன வாரம் தானே கொடுத்தேன் என சொல்லி காசு தர மறுத்து விட்டாராம். எவ்வளவோ கெஞ்சியும் அவருடைய அம்மா கொடுக்கவில்லையாம். அது மட்டுமல்ல தன்னுடைய நண்பர்கள் அனைவரும் போகிறார்கள் என்று சொல்ல அதற்கு அவர் அம்மா வீட்டில் ஒரு பிள்ளையை பெத்து போட்டு காசு கொடுப்பது என்பது ஈஸியானது தான்.

நம் வீட்டில் அப்படி இல்லையே என சொல்லியிருக்கிறார். அதற்கு தம்பி ராமையா உன்னை யாரு வீடு முழுக்க பெத்து போட சொன்னா?  என அவருடைய அம்மாவையே எதிர்த்து பேசினாராம். ஏனெனில் இவருக்கு மூன்று தம்பிகள் மற்றும் ஒரு தங்கையாம். அதன் பின் அருகில் இருந்த கோழியை பார்க்க அந்த கோழி ஐந்து முட்டைகளை போட்டிருந்ததாம்.

கோழியை விரட்டிவிட்டு அந்த முட்டைகள் ஐந்தையும் எடுத்துக்கொண்டு பக்கத்து கடைக்கு சென்று இருக்கிறார். அந்த கடை ஓனர் வேறு யாரும் இல்லை. இவருடைய அப்பாவின் குரு தானாம். உடனே அந்த ஐந்து முட்டைகளையும் அந்த கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு 50 பைசாவை வாங்கிக் கொண்டு அடிமைப்பெண் படத்தை பார்க்க போய்விட்டாராம்.

இதையும் படிங்க: சிவாவை நம்பினா வேலைக்கே ஆகாது… அந்த ஸ்டாருக்கு கொக்கி போட்ட சுதா கொங்கரா!

அந்த படத்தில் தாய் இல்லாமல் நான் இல்லை என்ற பாடலை கேட்டதும் இவருடைய கண்ணில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி இருக்கிறது. படம் முடிந்து நடு ராத்திரி வீட்டுக்கு வந்ததும் அவருடைய அம்மாவின் காலடியில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழுதாராம் தம்பி ராமையா. அவருடைய அம்மாவை இது நாள் வரை எதிர்த்து பேசியதே கிடையாதாம்.

இனிமேல் எதிர்த்து பேசவும் மாட்டேன் என அந்த பதினோரு வயதில் உறுதி மொழி கொண்டாராம் தம்பி ராமையா. அந்த அளவுக்கு எம்.ஜி.ஆரின் அந்த பாடல் தன்னை எந்த அளவு தாக்கி இருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம் என் தம்பி ராமையா அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top