எம்ஜிஆருக்கு ‘மக்கள் திலகம்’ பட்டத்தை கொடுத்தவர்.. பின்னாளில் அவருக்கு பெரிய எதிரி.. யார் தெரியுமா?..
இந்திய சினிமாவிலேயே பெரிய ஆளுமையாக கருதப்பட்டவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். இவர் அடைந்த புகழை இன்று வரை யாராலும் எட்ட முடியவில்லை. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி இவர் அடைந்த வளர்ச்சி எல்லையில்லாதது. அன்றைய சூழலில் இருந்து இப்ப வரைக்கும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரிக்காத வீடுகளே இல்லை எனலாம்.
புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்ற அடைமொழிகளால் அறியப்படுகிறார் எம்ஜிஆர். யாரிடமும் பகைமை பாராட்டதவர். யாரையும் மனம் புண்படும்படி பேசாதவர். இப்படி இருந்த எம்ஜிஆருக்கு ஒரு எதிரி இருந்திருக்கிறார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
ஆம் , இருந்திருக்கிறார். அவர் தான் பழம்பெரும் எழுத்தாளரான தமிழ்வாணன். இவர் தான் ஒரு காலத்தில் எம்ஜிஆருக்கு ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தையும் கொடுத்தவர். தமிழ்வாணன் யாரையும் துணிந்து விமர்சிப்பதில் வல்லவர். எப்பேற்பட்ட ஆளுமையாக இருந்தாலும் அவரை பற்றி விமர்சிக்க தயங்கமாட்டார்.
பிரபல வார இதழான ‘கல்கண்டு’ இதழின் ஆசிரியராக இருந்தவர் தமிழ்வாணன். அந்த வார இதழில் கலைஞர், எம்ஜிஆர், கிருபானந்த வாரியார் போன்றோரை கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறார் தமிழ்வாணன். அப்படி எழுதிய ஒரு விமர்சனம் தான் எம்ஜிஆரை கடுமையாக தாக்கியிருக்கிறது.
பொதுவாக எந்த விமர்சனத்தையும் கண்டுகொள்ளாத எம்ஜிஆர் தமிழ்வாணன் எழுதிய விமர்சனத்தை மட்டும் கவனித்திருக்கிறார் என்றால் தமிழ்வாணனை தன்னுடைய பலம் பொருந்திய எதிரியாக நினைக்க ஆரம்பித்தார் எம்ஜிஆர் என்று தமிழ்வாணனின் மகனான லேனா தமிழ்வாணன் ஒரு பேட்டியில் கூறினார். மேலும் அவர் கூறும் போது ஜப்பானில் எக்ஸ்போ 70 என்ற இடத்தில் ஒரு கண்காட்சிக்காக தமிழ்வாணன் சென்றிருந்தாராம்.
அங்கு ஏற்கெனவே உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சூட்டிங்கிற்காக எம்ஜிஆர் அங்கு இருக்க தமிழ்வாணன் வருகையை அறிந்த எம்ஜிஆர் படப்பிடிப்பிற்கு அழைத்திருக்கிறார். உடனே தமிழ்வாணனும் எம்ஜிஆரை பார்க்க படப்பிடிப்பிற்கு சென்றிருக்கிறார். அப்போது எம்ஜிஆர் தமிழ்வாணனிடம் தன்னைப் பற்றிய விமர்சனத்தை பற்றி தான் கோபமாக ஆலோசித்துக் கொண்டிருந்தாராம் எம்ஜிஆர்.
இதையும் படிங்க : மணிரத்னம் படத்தை புகழ்ந்து பேசியதால் கடுப்பான ராஜ்கிரண்… உதவி இயக்குனருக்கு நேர்ந்த சோகம்…
இந்த தகவலை கூறிய லேனா தமிழ்வாணன் ‘எம்ஜிஆர் யாரையும் கண்டுகொள்ளமாட்டார். ஆனால் என் அப்பாவைத்தான் அவருடைய பலம் பொருந்திய எதிரியாக கருதினார், அந்தக் காலத்தில் யாருமே எம்ஜிஆரை விமர்சிக்க தயங்கிய நிலையில் என் அப்பா மிகவும் துணிச்சலாக விமர்சனம் எழுதினார்’ என்று பெருமையாக கூறினார்.