Categories: Cinema News latest news

இந்த ஆண்டின் ‘100 கோடி’ படங்கள் இதுதான்!

இந்த வருடம் இன்னும் நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட முடிவுக்கு வரப்போகிறது. இதில் இதுவரை நூறு கோடியை வசூல் செய்த படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஒரு பெரிய ஹிட்டிற்காக கோலிவுட் போராடியது. தனுஷ், சிவகார்த்திகேயன், ரஜினி , கமல் படங்கள் வந்தும் கூட கோலிவுட்டில் இன்னும் ஒரு பெரிய வெற்றிப்படம் அமையவில்லை.

இதற்கு மலையாள படங்களின் வருகையும் அந்த படங்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய நம்முடைய ரசிகர்களும் ஒரு மிகப்பெரிய காரணமாகும். இந்தநிலையில் இந்த வருடத்தில் இதுவரை 100 கோடியை வசூல் செய்த படங்கள் குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.

அதன்படி சுந்தர் சியின் அரண்மனை 4, விஜய் சேதுபதியின் மஹாராஜா, தனுஷின் ராயன், கமலின் இந்தியன் 2 மற்றும் விக்ரமின் தங்கலான் ஆகிய படங்கள் இதுவரை இந்த லிஸ்டில் இணைந்துள்ளன.

இதில் அரண்மனை மற்றும் மஹாராஜா இரண்டு படங்கள் மட்டும் தான் கம்மியான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் ஆகும். சொல்லப்போனால் உண்மையான வெற்றி இந்த இரண்டு படங்களும் தான்.

பிற படங்கள் எல்லாம் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதால் இந்த நூறு கோடி என்பது மற்ற 3 படங்களுக்கும் ஒரு பெரிய விஷயமில்லை. அடுத்ததாக விஜயின் கோட், ரஜினியின் வேட்டையன், சிவகார்த்திகேயனின் அமரன் படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன.

மேலே சொன்ன படங்கள் நூறு கோடி கிளப்பில் இணையுமா? என்பதை நாம் சற்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Published by
manju