சொதப்பலான திரைக்கதை… தனியாக தாங்கி நிற்கும் சீயான் விக்ரம்… தங்கலான் எப்படி இருக்கு?...
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் (ஆகஸ்ட் 15ந் தேதி) இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தங்கலான். இப்படம் பல வருட போராட்டத்திற்கு பின்னர் திரைக்கு வந்து இருக்கிறது. முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கின்றனர்?
விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். கேஜிஎஃப் காலக்கட்டத்தில் வாழ்ந்த பழங்குடியினரின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. படத்திற்கு பின்னணி இசை பெரிய அளவில் உதவி செய்து இருக்கிறது.
இதையும் படிங்க: மூணுல ஒன்னு.. வெளியேறிய எழில்… உளறாதீங்க மனோஜ்… சிக்க போகும் கதிர்!..
ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் ஒவ்வொரு சீனுக்குமே உழைப்பை கொட்டி இருக்கின்றார். இப்படம் உண்மை சம்பவத்தின் காலக்கட்டத்தினை அப்படியே காட்சியாக அமைத்து இருக்கின்றனர். தங்கலான் படத்தில் லைவ் டப்பிங் பயன்படுத்தி இருப்பதால் பல இடத்தில் வசனங்கள் பிரச்னையாகவே அமைந்து இருந்தது.
முதல்முறையாக மாளவிகா மோகனன் வித்தியாசமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இருந்தும், திரைக்கதையை பா.ரஞ்சித் பல இடத்தில் சொதப்பி இருக்கிறார். முதல் பகுதியை விட இரண்டாம் பகுதியின் காட்சிகள் மிக துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. இவர்களை விட சீயான் விக்ரம் தன்னுடைய நடிப்பில் அசத்தி இருக்கிறார்.
இதையும் படிங்க:இளையராஜாவோட பயோபிக் சூட்டிங் பரபர அப்டேட்… இயக்குனர் சொன்ன அந்தத் தகவல்
கிட்டத்தட்ட அவர் தங்கலான் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார். ஒரு இடத்தில் கூட விக்ரமை காண முடியவில்லை. அந்த கதாபாத்திரத்துடனே ஒன்றி வாழ்ந்து இருக்கிறார். இடைவேளை காட்சிகள் பெரிய அளவில் சோதித்து பார்க்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. தங்கலான் கொஞ்சம் தாங்கலாம். விக்ரமுக்காக கண்டிப்பாக இந்த படம் தியேட்டரில் பார்க்கலாம்.