என்னங்க அம்புட்டு பஞ்சமா? தங்கலான் படத்திலும் இதை செய்ய போறாங்களா?… விக்ரம் சொன்ன நியூஸ்…

by Akhilan |   ( Updated:2024-08-17 14:09:15  )
என்னங்க அம்புட்டு பஞ்சமா? தங்கலான் படத்திலும் இதை செய்ய போறாங்களா?… விக்ரம் சொன்ன நியூஸ்…
X

Thangalaan: தங்கலான் படம் ரிலீஸாகி சுமார் வரவேற்பு பெற்று வரும் நிலையில் நடிகர் விக்ரம் தற்போது முக்கிய முடிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பில் இருந்த இப்படம் சமீபத்தில் ரிலீஸானது. கேஜிஎஃப் பழங்குடியினரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த இப்படத்தில் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.

இதையும் படிங்க: மாஸ்டர் சாதனையை முறியடிக்குமா கோட்?!.. ரசிகர்கள் எதிர்பார்ப்பது என்ன?!..

இப்படத்தின் முதல் நாளிலேயே தங்கலான் வசூல் குவித்தது. மூன்று நாளில் இதுவரை 22 கோடிக்கு அதிகமாக தங்கலான் வசூல் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விக்ரமின் நடிப்புக்காகவே விருதுகள் குவியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஐதராபாத்தில் தங்கலான் நிகழ்ச்சி புரோமோஷனில் கலந்துக்கொண்டு பேசிய விக்ரம் முக்கிய விஷயத்தினை உடைத்து இருக்கிறார். அதில் பேசிய விக்ரம், தங்கலான் கதையை வைத்து 100 பாகங்கள் கூட எடுக்க முடியும். இதனால் தங்கலான் முதல் பாகத்திற்கு நீங்கள் காட்டும் ஆர்வத்தில் நாங்கள் மற்றொரு முடிவை எடுத்து இருக்கிறோம்.

இதையும் படிங்க: தங்கலான் தங்கம் எடுத்துச்சானு தெரியல! பா.ரஞ்சித் தட்ட தூக்காம இருந்தா சரி

அதன்படி, இரண்டாம் பாகத்தினை இயக்க நான், இயக்குனர் பா.ரஞ்சித்தும், தயாரிப்பாளரும் இணைந்து பேசினோம். பா.ரஞ்சித் அவர் பட வேலையை முடித்துவிட்டால் உடனே சென்றுவிடுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே டாப் ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் தோல்வியை மட்டுமே தழுவி இருக்கிறது. இதில் சமீபத்தில் வெளியான டிமான்டி காலனி 2 மட்டுமே விதிவிலக்காக அமைந்தது.

தங்கலான் அடுத்த பாகமாக எடுக்கப்பட்டால் ரசிகர்கள் வரவேற்பு கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். புதுக்கதை இல்லாமல் தொடர்ந்து ஒரே கதையில் பாகங்களாக செல்வது ரசிகர்களிடம் ஹிட் அடிக்கும் என்பது கேள்வியாக தான் இருக்கிறது.

Next Story