பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் தங்கலான்... 4 நாள் வசூலைப் பாருங்க..!
சுதந்திரத்தினத்தன்று தங்கலான், டிமாண்டி காலனி 2, ரகு தத்தா ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. இவற்றில் சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் விக்ரம் நடித்த படங்களிலேயே மிகவும் கஷ்டப்பட்டு நடித்த படம் இதுதானாம். கலவையான விமர்சனங்களை சந்தித்த போதும் தங்கலான் படம் வசூல் ரீதியாக சக்கை போடு போட்டு வருகிறது. முதல் 4 நாள் வசூல் 60 கோடியை நெருங்கியுள்ளது.
தங்கலான் படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். உலகம் முழுவதும் 2000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று ஒரே நாளில் 5.65 கோடியை வசூலித்துள்ளது.
தங்கலான் படத்தில் விக்ரமுடன் இணைந்து கென்னடி, மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 4வது நாளில் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் மட்டும் 29.35 கோடியை வசூலித்துள்ளது.
அதற்கு அடுத்த இடத்தில் டிமாண்டி காலனி 2 படம் வந்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். முதல் பாகத்தைப் போலவே 2வது பாகமும் சிறப்பாக வந்துள்ளதாக விமர்சகர்கள் பாராட்டுகிறார்கள். அதே போல இந்தப் படத்திலும் அருள்நிதி தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்திற்கு சாம்.சிஎஸ். மிரட்டலாக இசை அமைத்துள்ளார்.
இந்தப் படங்களுக்குப் போட்டியாக கீர்த்தி சுரேஷின் ரகு தத்தா ரிலீஸானது. சுமன்குமார் இயக்கியுள்ளார். இது இந்தி திணிப்புக்கு எதிரான படமாக அமைந்துள்ளது. இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை. அது வசூலிலும் எதிரொலித்துள்ளது.
டிமான்டி காலனி 2 முதல் 3 நாள்களில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் அதிகபட்சமாக 4 கோடிக்கு மேல் வசூலித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஆனால் ரகு தத்தா படம் 3 நாள்களில் 50 லட்சம் மட்டுமே வசூலித்துள்ளது. எப்படியும் ஒரு கோடியைத் தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.