Connect with us
Vikram

Cinema News

விக்ரமுக்கு தேசிய விருது நிச்சயம்… அடித்துச் சொல்லும் பிரபலம்

சுதந்திரத்தினமான இன்று பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்த தங்கலான் படம் திரைக்கு வந்து பல்வேறு வகையான விமர்சனங்களைத் தந்து கொண்டுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது விமர்சனத்தைத் தந்துள்ளார். என்ன சொல்கிறார்னு பார்ப்போமா…

ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் விவசாயம் பண்ணிக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் மிராசுதாரரிடம் பண்ணை அடிமையாக இருக்கிறார்கள். அந்த இடத்துல தங்கம் இருப்பதை அறிந்து ஒருவன் அவர்களிடம் வந்து நீங்க மிராசுதாரரிடம் பண்ணை அடிமையாக இருப்பதை விட எங்கிட்ட வாங்க. நான் சம்பளம் தர்ரேன்.

அவனுடைய உடையைக் கொடுத்து மக்களை அழைத்துச் சென்று தங்கம் எடுக்க வைக்கிறான். அவர்கள் எடுத்தார்களா? இல்லையா? அதற்கு முன்பு வரை அவர்கள் கோவணம் கட்டிக்கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களின் வலியையும் இயக்குனர் ரஞ்சித் சொல்லி இருக்கிறார். இதுதான் கதை.

ஐதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி மட்டுமின்றி தமிழகத்திலும் எல்லா இடங்களிலும் போய் இந்தப் படத்துக்காக புரொமோஷன் பண்ணி இருக்கிறார். விக்ரம் இந்தப் படத்தில் வழக்கம்போல தன்னை முழுமையாகக் கொடுத்து இருக்கிறார். ஹாலிவுட் படத்தைப் பார்த்தது போல இருக்கு.

Thangalan

Thangalan

இந்தப் படத்திற்கு இன்னொரு பிளஸ் காஸ்டியூம். தன்னோட குழந்தைக்காக விக்ரமும், பார்வதியும் வாழும் வாழ்க்கை வேற லெவல். மயில், கருஞ்சிறுத்தை எல்லாம் விஎப்எக்ஸ்ல நல்லாவே இருக்கு. பசுபதியின் கேரக்டர் ரொம்ப அருமை. ராமானுஜர் பண்ணின வேலையைத் தான் அவர் பண்ணி இருக்கிறார்.

படத்தின் மைனஸ் என்னன்னா இந்தப் படத்துல அவர் எதைச் சொல்லி இருக்கிறார்? தங்கம் உண்மையிலேயே எடுத்தாங்களா? அல்லது பிரிட்டிஷ்காரன் கொள்ளை அடித்துவிட்டுப் போனானா?

தங்கம் யாருக்கு சொந்தம் என்று கேள்வி எழுகிறது. படத்தின் இன்னொரு முதுகெலும்பு இசை ஜி.வி.பிரகாஷ். அதைத் தாண்டி ஒளிப்பதிவு. மாளவிகா மோகனை அழகாகக் காட்டியிருப்பார்கள்.

ஒரு கட்டத்தில் பரதேசி படத்தின் சாயல் தெரிகிறது. இங்கு தங்கத்தை ஆவியோ, பேயோ, பூதமோ காத்து நிற்கிறது. அது யாருக்காகக் காத்து நிற்கிறது என்பது தான் படம். இந்தப் படத்தில் விக்ரமுக்கு தேசிய விருது நிச்சயம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top