தங்கலான் வெற்றி... இப்போ துருவ நட்சத்திரத்தை விடலாமே.. ஏன் நடக்கல?
தங்கலான் வெற்றிக்கு அப்புறம் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் பண்ணினா நல்லாருக்கும். கண்டிப்பா இது ஒரு நல்ல வசூலைக் கொடுக்கும்னு நினைக்கிறேன். இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் தான் இது.
துருவ நட்சத்திரம் படத்தை வெளிக்கொண்டு வருவதற்கு கௌதம் வாசுதேவ் மேனன் முயற்சியே செய்யாமல் இருப்பது போல இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுருக்கீங்க. கௌதம் வாசுதேவ் மேனனைப் பொருத்த வரைக்கும் அவரோட மிகப்பெரிய போராட்டமே அந்தப் படத்தை எப்படியாவது வெளியேக் கொண்டு வரணும்கறது தான்.
அந்தப் படம் பொருளாதார ரீதியாக இடியாப்ப சிக்கலிலே மாட்டிக்கிட்டு இருக்குறதனால தான் அவ்வளவு எளிதிலே அந்தப் படத்தைக் கொண்டுவர முடியலை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தங்கலான் படத்தைப் பொருத்தவரை வெற்றின்னே சொல்ல முடியாது. மகாராஜா, அரண்மனை 4 மாதிரி வசூலும் இல்லை. மக்கள்கிட்டயும் பெரிய வரவேற்புன்னு சொல்ல முடியாது. கலவையான விமர்சனம் தான்.
இந்தியிலும் ரிலீஸாகல. இப்படி இருக்கும்போது படம் வெற்றின்னே சொல்ல முடியாது. ஆனா படத்துக்கு வெற்றிவிழா கொண்டாடுறாங்க. இது யாருக்கு நிரூபிக்கணும்னு கொண்டாடுறாங்கன்னு ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு சித்ரா லெட்சுமணன் அளித்த பதில் இதுதான்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை தங்கலான் படத்தின் வசூல் மிகச்சிறப்பாக இருக்கு. அதைத் தான் வெற்றின்னு விழா எடுத்துக் கொண்டாடியதாக நான் நினைக்கிறேன்.
தமிழ்நாட்டைப் பொருத்த வரை தங்கலான் படத்தின் வசூலில் 25 சதவீதம் கூட வசூல் செய்யாத பல படங்களுக்கு இங்கே பிரம்மாண்டமான வெற்றி விழா கொண்டாடி இருக்காங்க. அதுக்கு என்ன சொல்றது? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விக்ரம் தன்னுடைய மார்க்கெட்டை அதிகரிப்பதற்காக பல படங்களில் வித்தியாசமான கேரக்டர்களை எடுத்து நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் கதையிலும் கவனம் செலுத்துகிறார். இவர் தற்போது நடித்து வெளியான தங்கலான் படம் விமர்சனங்களைக் கடந்து சக்கை போடு போட்டு வருகிறது.