லியோவால் தங்கலானுக்கு வந்த சோதனை!.. உழைப்பெல்லாம் வீணாப்போயிடுமா?!. அப்செட்டில் விக்ரம்...

Thangalan Movie: நடிகர் விக்ரம் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்தப் படம் ஜனவரி 26ல் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்தப் படத்திற்கான டீஸர் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இதுவரை நடித்த படங்களிலேயே விக்ரம் தங்கலான் திரைப்படத்தில் தான் அதிக உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். அதை பத்திரிக்கையாளர் பேட்டியிலேயே விக்ரம் சொல்லியிருப்பார். வெறும் கோமணத்துடன் காலில் செருப்பு இல்லாமல் அந்த இடத்தில் நடக்கும் போது முள்ளு எல்லாம் குத்தும் என தான் அனுபவித்த வலிகளையும் சொல்லியிருப்பார்.

இதையும் படிங்க: ஹாலிவுட்டில் கால் பதித்த சமந்தா.. அவெஞ்சரின் புதிய கேப்டன் மார்வலா..? வெளியான வீடியோ…

பிதாமகன் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் தான் விக்ரமின் அபார நடிப்பு அமைந்திருக்கிறது என்றே சொல்லலாம். கண்டிப்பாக இந்தப் படத்தில் நடித்ததற்காக விக்ரமுக்கு தேசிய விருது கூட கிடைக்க வாய்ப்பிருக்கலாம். அந்தளவுக்கு உடம்பை வருத்தி நடித்திருக்கிறார் விக்ரம்.

தங்கலான் பட டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும் அதன் தாக்கம் குறைவாகவே இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் லியோ படத்தின் வெற்றிவிழாவின் போது அந்த டீஸர் வெளியானதால் வந்த வினைதான் காரணம்.

இதையும் படிங்க: எங்க அப்பா ஒன்னும் என்ன அப்படி வளர்க்கல! நிரூபர் கேட்ட கேள்விக்கு பொங்கி எழுந்த கார்த்தி

ஒன்று லியோ வெற்றி விழாவுக்கு பிறகு டீஸரை வெளியிட்டிருக்கலாம். இல்லை அடுத்தமாதமே வெளியிட்டிருக்கலாம். அவசர அவசரமாக ரிலீஸ் செய்து லியோ அலையால் தங்கலான் டீஸர் வெளியான தடமே இல்லாமல் போய்விட்டதாக கோடம்பாக்கத்தில் கூறுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் தங்கலான் ரிலீஸுடன் வெற்றிமாறனின் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் நேரடியாக மோத இருப்பதாகவும் சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: ஹீரோக்களின் இமேஜ்களை உடைத்தெறிந்த தல.! இவரைப் பார்த்துக் கத்துக்கோங்கப்பா…

 

Related Articles

Next Story