தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட, வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் உணர்ச்சிமிகுந்த திரைப்படங்களை இயக்கியவர் தங்கர்பச்சான். இவர் பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் இயக்குனராக மாறினார். இவரை ஒளி ஓவியர் எனவும் சினிமாவில் அழைப்பார்கள்.
வாழ்க்கையிலிருந்து சினிமா எடுக்கும் தங்கர்பச்சான் அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக்கூடம், ஒம்பது ரூபாய் நோட்டு, அம்மாவின் கைப்பேசி, களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இதில் பெரும்பாலான படங்கள் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது.
இதையும் படிங்க: அடடே! விஜய் ஒருத்தரு தானேப்பா… எத்தனை பேரு வெயிட்டிங்கில இருக்கீங்க?
குறிப்பாக அழகி திரைப்படம் இப்போது வரை பேசப்படும் ஒரு படமாகவே இருக்கிறது. பள்ளியில் படிக்கும் சிறுவன் தேவதை போல இருக்கும் பெண்ணின் மீது ஈர்ப்பு கொள்கிறான். ஆனால், காலச்சூழ்நிலை அவன் நகரத்தில் மருத்துவராக வாழ்கிறான். ஒருநாள் தான் நேசித்த தனலட்சுமியை சாலையோரத்தில் வசிக்கும் பெண்ணாக பார்க்கிறான்.
அதன்பின் அவளுக்கு உதவ ஆசைப்பட்டு தன் வீட்டிலேயே வேலைக்கு வைக்கிறான். அதன்பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. எல்லோர் வாழ்க்கையிலும் தனலட்சுமி கதாபாத்திரம் போல ஒரு பெண் இருப்பாள் என்பதால் அந்த படம் பலரையும் அழவைத்தது. தான் நேசித்த பெண் தெருவோரத்தில் கஷ்டப்படுவதை பார்த்து வேதனைப்படும் கதாபாத்திரத்தில் பார்த்திபன் சிறப்பாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ரயிலிலேயே ஒரு படத்துக்கு எல்லா பாட்டையும் போட்ட இளையராஜா!.. அட அந்த படமா?!..
தனலட்சுமி வேடத்தில் நந்திதா தாஸ் நடித்திருப்பார். இப்படத்திற்கு இளையராஜா சிறப்பான பாடல்களை பாடியிருந்தார். குறிப்பாக ஒளியிலே தெரிவது தேவதையா மற்றும் உன் குத்தமா என் குத்தமா போன்ற பாடல்கள் காலத்தையும் தாண்டி நிற்கும் பாடல்களாகும். இந்த படத்திற்கு உயிர்நாடியே தனலட்சுமி கதாபாத்திரம்தான்.
எனவே, நந்திதா தாஸுக்கு டப்பிங் குரல் கொடுக்க பலரை வைத்தும் தங்கர்பச்சானுக்கு திருப்தி இல்லை. ஏனெனில், பழைய தென்னாற்காடு மாவட்டத்தில் கதை நடக்கும். அந்த மாவட்டத்தின் வட்டார மொழியை பேசும் பெண் கிடைக்கவே இல்லை. எனவே, தனது ஊருக்கு போய் அங்கு தனக்கு தெரிந்த பெண்களிடம் பேச்சு கொடுத்து அதை அப்படியே பதிவு செய்து அதை போட்டு காட்டி அதுபோலவே பேச சொன்னாராம். அதன் பின்னர்தான் அந்த அழகி கதாபாத்திரத்திற்கு உயிர் கிடைத்ததாம்.
இதையும் படிங்க: பாடலை கேட்டு பூரித்து போன விஜயகாந்த்!.. இளையராஜாவுக்கு என்ன செய்தார் தெரியுமா?…
Good bad…
கங்குவா திரைப்படத்தில்…
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…