More
Categories: Cinema History Cinema News latest news

அழகி படத்தை காப்பாற்றிய அஜித் படம்!.. இது என்னடா புதுக்கதை!…

தமிழ் சினிமாவில் வந்த சிறந்த முக்கிய படங்களில் லிஸ்ட் எடுத்தால் அதில் கண்டிப்பாக அழகி படம் இடம் பெற்றிருக்கும். இப்படத்தை ஒளி ஓவியர் தங்கர்பச்சான் இயக்கியிருந்தார். கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞனின் பள்ளி காதல் எப்படி அவன் வாழ்வின் கடைசி வரை வருகிறது என்பதுதான் இப்படத்தின் கதை.

இப்படத்தில் வாழ்வியலை அழகாக காட்சிப்படுத்தியிருந்தார் தங்கர்பச்சான். இப்படத்தில் பார்த்திபன் கதையின் நாயகனாகவும், பாலிவுட் நடிகை நந்திதா தாஸ் கதையின் நாயகியாகவும் நடித்திருந்தனர். இப்படத்தில் இளையராஜவின் இசையில் உருவான அனைத்து பாடல்களும் காலத்தையும் கடந்து கூடியவை.

Advertising
Advertising

alagi

இப்படம் பார்த்த பலரும் தங்கள் வாழ்வில் சந்தித்த காதலை எண்ணி கண்ணீர் விட்டனர். அதனால்தான் அழகி திரைப்படம் ஒரு சிறந்த படமாக கருதப்படுகிறது. ஆனால், இப்படம் வெளியான போது வரவேற்பை பெறவில்லை. இதுபற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ள தங்கர்பச்சான் ‘அழகி படம் முடிந்து படத்தை தயாரிப்பாளர் என்னை அழைத்து அசிங்கமாக திட்டினார். படம் ஓடவே ஓடாது. ஆனாலும் உங்கள் வாழ்க்கை இதில் இருக்கிறது. அதனால், சொந்தமாக ரிலீஸ் செய்கிறேன் எனக்கூறி அப்படத்தை வெளியிட்டார்.

அழகி படம் வெளியான போது அஜித் நடித்த ரெட் திரைப்படமும் வெளியானது. எனவே, அந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு அழகிக்கு தியேட்டரே கிடைக்கவில்லை. மிகவும் குறைவான தியேட்டர்களில் அழகி வெளிவந்தது. தியேட்டருக்கு சென்று பார்த்தால் மிகவும் சொற்பமான ரசிகர்களே இருந்தனர்.

red

ஆனால், படம் முடிந்த வெளியே வந்த சிலர் அழுது கொண்டே சென்றதை பார்த்ததும் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. படம் வெளியாகி சில நாட்கள் தியேட்டரில் கூட்டமே இல்லை. அஜித்தின் ரெட் படம் ரசிகர்களை கவரவில்லை. எனவே, அழகி படத்தை பார்க்க வந்தனர். அதன்பின் பல தியேட்டர்களில் இப்படம் 100 நாட்கள் ஓடியது’ என தங்கர்பச்சான் அந்த பேட்டியில் கூறினார்.

இதையும் படிங்க: பாலாவை மலையிலிருந்து தள்ளிவிட பார்த்த பிதாமகன் தயாரிப்பாளர்!.. அட இது எப்ப நடந்தது தெரியுமா?…

Published by
சிவா

Recent Posts