தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் முரளி. தனது தனித்துவ நடிப்பின் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திழுத்தவர். இவர் பிரபல கன்னட திரைப்பட இயக்குனரான சித்தலிங்கய்யாவின் மகன். இளம்வயதில் தான் சினிமாவில் நடிக்கப்போவதாக தனது தந்தையிடம் அடிக்கடி கூறுவாராம் முரளி. ஆனால் முரளியின் தந்தைக்கு முரளி நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்திருக்கிறது. எனினும் முரளியின் தாயார் செய்த வற்புறுத்தலால் முரளியை கதாநாயகனாக வைத்து “பிரேம பருவா” என்ற திரைப்படத்தை இயக்கினார் சித்தலிங்கய்யா.
அதனை தொடர்ந்து சில கன்னட திரைப்படங்களில் நடித்த முரளி, “பூவிலங்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல தமிழ் திரைப்படங்களில் நடித்த முரளி, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தனி இடத்தை பிடித்தார்.
இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்து வந்த முரளி, கடந்த 2010 ஆம் ஆண்டு இறுதய கோளாறால் உயிரிழந்தார். இந்த நிலையில் பிரபல ஒளிப்பதிவாளரான தங்கர் பச்சான் முரளி நடித்த ஒரு படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அப்போது தங்கர் பச்சானும் பிரபல மூத்த பத்திரிக்கையாளரான வலைப்பேச்சு பிஸ்மியும் பேசிகொண்டிருந்தார்களாம்.
அந்த படப்பிடிப்பின் போது முரளி அடிக்கடி சீப்பை வைத்து தலை சீவிக்கொண்டிருந்தாராம். அப்போது தங்கர் பச்சான், பிஸ்மியிடம், “இப்போலாம் தமிழ் சினிமா யார் கையில் இருக்கு தெரியுமா? கையில் சீப்பு வச்சிருக்குறவங்க கையில் இருக்கு” என கிண்டலாக கூறினாராம். கண்ணாடியை பார்த்து தலை சீவிக்கொண்டிருந்த முரளி, தனது கண்ணாடியை நகர்த்திக்கொண்டு தங்கர் பச்சானை பார்த்தாராம்.
பிரபல குணச்சித்திர…
Jyothika: கங்குவா…
Surya 44:…
Ajithkumar: நடிகர்…
Viduthalai 2:…