மொத்த படப்பிடிப்பு முடிஞ்சும் ஒரு பாட்டு வேணும் என அடம் பிடித்த எம்.ஜி.ஆர்... சுவாரஸ்ய பின்னணி
தமிழ் சினிமாவின் துவக்க காலத்தில் நடிகர்கள் சொன்னால் இயக்குனர்கள் என்ன மாற்றம் என்றாலும் செய்வார்கள் என்ற நிலையே இருந்தது. அந்த வகையில் மொத்த படப்பிடிப்பும் முடிந்த படத்திற்கு எம்.ஜி.ஆர் ஒரு பிடிவாதம் பிடித்தாக தகவல்கள் தெரிவிக்கிறது.
எம்.ஜி.ஆர் மற்றும் லதா இருவரின் நடிப்பில் உருவான படம் மீனவ நண்பன். இப்படத்தினை இயக்கி இருந்தவர் ஸ்ரீதர். மீனவர்களின் வாழ்க்கையினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படம். இப்படத்திற்கு மொத்த படப்பிடிப்பு முடிந்த பின்னரும், எம்.ஜி.ஆர் மீண்டும் ஒரு கனவு பாடலினை உருவாக்கும் படி கூறி இருந்தாராம்.
சத்யா ஸ்டூடியோவில் எம்.ஜி.ஆரின் மீனவ நண்பன் படப்பிடிப்பு நடைபெற்று இருந்தது. கவிஞர் முத்துலிங்கத்தினை எம்.ஜி.ஆர் சந்தித்தாராம். அவரிடம் இந்த படத்தில் என்ன பாடல் எழுதி இருக்க எனக் கேள்வி கேட்டார். அவரிடம் முத்துராமலிங்கம் நான் எதுவுமே எழுதலை என்றாராம். எம்.ஜி.ஆர் அதிர்ச்சியாக ஏன்னென கேட்டார். இல்லை யாரும் கூப்பிடலை என்றாராம். உடனே படத்தின் புரொடக்ஷன் மானேஜர் ராஜாராமை அழைத்தார் எம்.ஜி.ஆர்.
முத்துலிங்கத்தை வைத்துப் பாட்டு எழுதச் சொன்னேனே…! ஏன் செய்யலை? எனக் கேட்டு இருக்கிறார். அவரை தேடினோம். ஊரில் இல்லை என்றார். உடனே எம்.ஜி.ஆர், அதான் இப்போ இருக்காருல உடனே ஒரு பாடலை எழுதி வாங்குங்க என்றாராம். அதற்கு ராஜாராம் ‘படம் முடிஞ்சிருச்சே..’ என இழுத்தாராம். உடனே இயக்குனர், தயாரிப்பாளரை வர சொல்லுங்கள் என்றாராம் எம்.ஜி.ஆர்.
அவர்களும் எம்.ஜி.ஆரிடம் வந்து நடந்ததை அறிந்து கொண்டனர். ஆனால் இயக்குனர் ஸ்ரீதர் படத்திற்கு எந்த இடத்தில் பாடல் வைக்கிறது என எம்.ஜி.ஆரிடம் கேட்டார். கனவு பாட்டுக்கு என்ன சிச்சுவேஷன் சும்மா ஒரு படத்தில வையுங்க. மீண்டும் படப்பிடிப்பை வைக்கலாம் என்றாராம். அப்படி தான் தங்கத்தில் முகமெடுத்து எனத் துவங்கும் பாடல் உருவானது.