திருடன் என பட்டம் சூட்டப்பட்ட தங்கவேலு!.. காப்பாற்றிய மூத்த நடிகர் கடவுளாக மாறிய பின்னனி..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நகைச்சுவை நடிகர் தங்கவேலு. இவரின் அற்புதமான நடிப்பை எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் வரும் காட்சியில் அறிந்திருப்போம். தன்னுடைய மகளை காதலிக்கும் நாகேஷ் தங்கவேலு இல்லாத நேரத்தில் வந்து சந்திக்க எதார்த்தமாக வீட்டிற்கு வரும் தங்கவேலுவை பார்த்து கடவுளாக நடிக்கும் நாகேஷிடம் தங்கவேலு பேசும் காட்சிகல் தியேட்டர் அரங்கத்தையே சிரிப்பலைகளாக மாற்றியிருக்கும்.
அந்த காட்சியில் தங்கவேலு நாகேஷ் இருவரும் பிரம்மாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த தங்கவேலு தன்னுடைய சிறு வயதிலேயே தாயை இழக்க தந்தை இவரை அவரின் உறவினர்கள் வீட்டின் பொறுப்பில் விட்டு சிங்கப்பூர் செல்கிறார். ஆனால் உறவினர்கள் கொடுமைகளின் பிடியில் சிக்கி வேதனை படும் தங்கவேலு பாட்டு பாடியும் நடனம் ஆடியும் அந்த வேதனையை போக்கிக் கொள்கிறார்.
இவரின் கஷ்டத்தை பார்த்த ஒரு தியேட்டர் உரிமையாளர் தங்கவேலுவை எதார்த்தம் பொன்னுச்சாமி என்ற நாடகக்குழுவில் சேர்த்து விடுகிறார். அந்த நாடகக்குழுவில் இருந்து வந்தவர்கள் தான் எம்ஜிஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா போன்றோர்கள். அதனால் அவர்களின் அறிமுகம் தங்கவேலுவிற்கு மிக எளிதாக கிடைக்கிறது. தங்கவேலு நடித்த முதல் படம் சதிலீலாவதி படம் தான். ஆனால் அந்த படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 17 வருடங்கள் காத்திருக்க வேண்டியது இரண்டாவது படத்திற்காக. வாய்ப்புகள் வரவில்லை.
இதையும் படிங்க : அதுதான் என் முதல் காதல்.. அப்புறம்தான் எல்லா காதலும்.. கமல் சொல்றத கேளுங்க!…
அதன் பின் பணம் என்ற படத்தில் சிவாஜியுடன் நடிக்க தொடங்கினார். அந்த பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தது என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு சமயம் என்.எஸ்.கிருஷ்ணன் தங்கவேலுவிற்கு படத்தில் நடிக்க அட்வான்ஸ் தொகையாக 5000 ரூபாயை கொடுத்துள்ளார். ஆனால் தங்கவேலு வாங்கி கொண்டிருந்த சம்பளமோ வெரும் 50 ரூபாய். இந்த 5000 ரூபாயை தன் வீட்டிற்கு கொண்டு போக இவரின் பெரியப்பா இவ்வளவு தொகையை கொண்டு வந்ததை பார்த்து திருடிக் கொண்டு தான் வந்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டார்.
தங்கவேலு சொல்லியும் கேட்காமல் நேராக என்.எஸ்.கே.வீட்டிற்கே சென்று அவரின் பெரியப்பா மன்னிப்பு கேட்கிறார். ஆனால் அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் பிறகு அறிந்ததை தெரிந்து கொண்ட என்.எஸ்.கே அந்த பணத்தை நான் தான் கொடுத்தேன் என்று கூறியிருக்கிறார்.
இப்படி தங்கவேலுவின் வாழ்க்கையில் தீபத்தை ஏற்றிவைத்தவர் என்.எஸ்.கே. தான். அதனால் தங்கவேலு எப்பொழுதும் தன் கழுத்தில் ஒரு பெரிய டாலருடன் செயின் போட்டிருப்பார். அந்த டாலரை திறந்து பார்த்தால் என்.எஸ்.கே. சிரித்த முகத்துடன் இருக்கும் புகைப்படம் அதன் உள்ளே இருக்கும். அவரை தெய்வமாகவே பார்த்தவர் தங்கவேலு.