உச்ச நடிகரை வில்லானாக்கும் தனி ஒருவன் 2.. ரவிக்கு செம டஃப்பா இருக்குமே..!

Thani oruvan2: ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாக இருக்கும் தனி ஒருவன் 2 பாகத்தில் வில்லனாக மிகப்பெரிய நட்சத்திரம் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படி அவர் நடிக்கும் பட்சத்தில் படம் மாஸாக இருக்கும் என்கின்றனர் சினிமா வட்டாரம்.

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவி பரபரப்பாக இயங்கி வருகிறார். ப்ரதர் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது. கமலின் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை முடித்துக்கொண்டு தனி ஒருவன் 2 படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் வந்த நிவாரணம்! 2 கோடி கொடுத்தாரா அஜித்? யாருக்கும் தெரியாத செய்தி

முதல் பாகத்தினை போல இதிலும் ரவியுடன் நயனே ஜோடி போட இருக்கிறார். ஜெயம் ராஜா இயக்க இருக்கும் இப்படத்தில் யார் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஹிப்ஹாப் தமிழா முதல் பாகத்தில் இசையமைத்து இருந்தார்.

இந்த சீசனில் சாம் சிஎஸ் இசையமைக்க இருக்கிறார். முதல் பாகத்தில் சித்தார்த் அபிமன்யூவாக நடித்த அரவிந்த் சாமி க்ளைமேக்ஸில் இறந்துவிடுவார். அதனால் இரண்டாம் பாகத்தில் வேறு வில்லனே வருவார். அரவிந்த் சாமியை மிஞ்சி யார் நடிப்பார் என படக்குழு தேடுதல் வேட்டையில் இருக்கிறது.

இதையும் படிங்க: சொன்னதை செய்ய முடியாதா…? இன்னும் திருந்தலையா நீங்க.. தலைவர்170க்காக சண்டைக்கு நிற்கும் ரசிகர்கள்..!

இந்நிலையில் இப்படத்தில் அமிதாப் பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். ஏற்கனவே சில சீரிஸில் வில்லனாக அபிஷேக் நடித்து இருக்கிறார். இதில் முழுநீள மிரட்டல் வில்லனாக அவர் நடித்தால் கண்டிப்பாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்பப்படுகிறது.

Related Articles
Next Story
Share it