மைக் மோகனுக்கு நன்றி சொன்ன மக்கள் செல்வன்.! பின்னணி இதோ...

சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நான்காவது முறையாக இணைந்த திரைப்படம் 'மாமனிதன்'. இவர்கள் கூட்டணியில் உருவான 'இடம் பொருள் ஏவல்' இன்னும் வெளியாக வில்லை என்றாலும் தென் மேற்கு பருவ காற்று, தர்மதுரை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

ஆனால், இந்த மாமனிதன் திரைப்படம் ரிலீசாகி எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை யுவன் மற்றும் இளையராஜா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரிதத்து இருந்தன. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெறவில்லை என்றாலும் ஆஹா OTT தளத்தில் வெளியாகி தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்நிலையில், மாமனிதன் படத்தை OTT தளத்தில் பார்த்த மைக் மோகன் பாராட்டி பேசியுள்ளார், பாலுமகேந்திரா சார் உருவாக்கிய சினிமா குடும்பம் ரொம்ப பெருசு. அந்த குடும்பத்தில் நான்தான் மூத்த பிள்ளை என்பதில் எனக்கு ரொம்ப பெருமை என்று கூறினார்.

இதையும் படிங்களேன்- சத்தமில்லாமல் வேலை காட்டிய லோகேஷ்… தளபதி 67 ரகசியத்தை மொத்தமாக கண்டுபிடித்த ரசிகர்கள்…

அதில் ஒருவரான தம்பி சீனு ராமசாமி இயக்கிய மாமனிதனை பார்த்தேன். ஒரு நல்ல படம், நம்பிக்கை துரோகதத்தை தத்ருபமாக எடுத்துள்ளார். குடும்பத்திலும் நட்பு ரீதியாகவும் வரும்நம்பிக்கை துரோகம் நல்லா எடுத்துக்காட்டியுள்ளார். சீனு ராமசாமி மற்றும் படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள் என தெரிவித்தார். இதற்கு, நடிகர் விஜய் சேதுபதி நன்றி தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பேசிய ஆடியோவை பகிர்ந்துள்ளார்.

 

Related Articles

Next Story