தர்ஷன் கைது ரொம்ப சந்தோஷமா இருக்கு… இருந்தாலும் இதை செஞ்சிருக்கலாம்.. சனம் ஷெட்டியின் திடீர் வீடியோ!

by Akhilan |   ( Updated:2025-04-05 01:35:18  )
தர்ஷன் கைது ரொம்ப சந்தோஷமா இருக்கு… இருந்தாலும் இதை செஞ்சிருக்கலாம்.. சனம் ஷெட்டியின் திடீர் வீடியோ!
X

sanam tharshan

Tharshan: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாக இருந்த தர்ஷன் கைது சம்பவம் குறித்து அவரின் முன்னாள் காதலியும், நடிகையுமான சனம் ஷெட்டி வெளியிட்டு இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவர் மாடல் தர்ஷன். அந்த சீசனில் தொடர்ந்து அவருக்கு நல்ல பெயர் குவிய பைனல் நெருங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் வாக்கை பிரித்து போட்ட ரசிகர்களால் வெளியேறினார்.

இருந்தும் தர்ஷனுக்கு தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது. கூகுள் குட்டப்பா என்ற படத்தில் கே.எஸ்.ரவிகுமாருடன் இணைந்து நடித்தார். அதே நேரத்தில் நடிகை சனம் ஷெட்டியுடன் தர்ஷனுக்கு காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் நிச்சயத்தார்த்தமும் நடந்துள்ளது.

ஆனால் தர்ஷன் பிக்பாஸ் எண்ட்ரியால் சனத்திடம் இருந்து பிரிந்தார். இதை தொடர்ந்து படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். அவர் தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார். சில நாட்கள் முன்னர் இவர் வீட்டின் முன்னர் நீதிபதி மகன் ஒருவர் காரை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்று இருக்கிறார்.

அதை எடுக்க சொன்ன போது இருவருக்கும் வாக்குவாதம் நடந்த நிலையில் அடிதடியாகி நீதிபதி மகன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருவருக்கும் நடந்த பிரச்னையில் தர்ஷன் மீது வழக்கு தொடரப்பட்டு அவர் நேற்று வெள்ளிக்கிழமை கைதும் செய்யப்பட்டு இருக்கிறார்.

இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி, நேற்றில் இருந்து எனக்கு நண்பர்கள் வீடியோ வெளியிட்டனர். அதில் தர்ஷனின் கைது செய்தி இருந்தது. முதலில் எனக்கு மனப்பூர்வமாக அதில் சந்தோஷம் இருந்தது. இருந்தும் அவரின் இடத்தில் இன்னொருவர் இருந்தால் நான் இப்படியா யோசித்து இருப்பேன்.

இரு தரப்பு குறித்து விசாரிக்க வேண்டும். அப்படி நீதிபதி மகன் சரியாக இருந்தால் சிசிடிவி கேமரா வெளியிட வேண்டும். அவரை வெள்ளிக்கிழமை கைது செய்து இருக்கிறீர்கள். விசாரணையே திங்கள் கிழமை தான் நடக்கும். இது சரியான விஷயமே இல்லை என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

Next Story