Cinema News
அந்த கவுண்டமணி காமெடி படுகேவலம்.. ஆனா யாருமே அத கேக்கல- பொங்கிய ஆர்.ஜே.பாலாஜி
நடிகரும், இயக்குநரும், தொகுப்பாளருமான ஆர்.ஜே.பாலாஜி, நானும் ரவுடி தான், தேவி, வீட்ல விஷேசம், எல்கேஜி, இவன் தந்திரன், ஸ்பைடர், மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதில் வீட்ல விஷேசம், மூக்குத்தி அம்மன் படங்களை இவரே இயக்கியுள்ளார். ரேடியோயில் ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி இன்று பல வெற்றிப் படங்களை இயக்கியும், நடித்தும் வருகிறார்.
மேலும் இவர் ஒரு கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஆர்.ஜே.பாலாஜி, தற்போது சினிமா மிகவும் மாறிவிட்டது என்றும், என்னை போல எந்த சினிமா பின்புலமும் இல்லாத ஒருவரால் முயற்சி செய்தால், மேலே வர முடியும் படி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். தற்போது வரும் படங்கள் தைரியமாக பல பிரச்சனைகளை பற்றி பேசுகிறது.
மாரிசெல்வராஜ், ரஞ்சித் போன்ற இயக்குநர்களால், அவங்கள் பக்க படங்களை சுதந்திரமாக எடுக்க முடிகிறது. அதுவே ஒரு பெரிய முன்னேற்றம் தான். அந்த காலத்தில் வந்த நாட்டாமை, சின்ன கவுண்டர், தேவர் மகன், குங்கும பொட்டு கவுண்டர், பெரிய கவுண்டர் பொண்ணு என பல படங்கள் என்ன அரசியல் பேசுகிறது என்பதே தெரியாமல், அது ஒரு படம் என்ற எண்ணத்தில் நாம் சென்று பார்த்து வந்தோம்.
அதில் இருக்கும் தவறுகளை நாம் புரிந்துகொண்டது கூட இல்லை. சமீபத்தில் நான் ஒரு காமெடி வீடியோ பார்த்தேன். அதில் விஜயகுமார் நார்காலியில் அமர்ந்திருப்பார், கவுண்டமணி அவருக்கு ஷேவிங் செய்துகொண்டிருப்பார். அப்போது கவுண்டமணி ‘நீங்க வெள்ளி டம்பளர்ல காபி குடிக்கிறீர்ங்க. எங்களுக்கு ஏன் கொட்டாங்குச்சில கொடுக்குறீங்க?’ என்று கேட்பார்.
அதற்கு விஜயகுமார், ‘அப்றம் உனக்கும் எனக்கும் என்ன வித்யாசம் இருக்கு’ என்று கூறுவார். இதனை சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருந்தால், நானும் சிரித்திருப்பேன். இப்போது தான் அதெல்லாம் தப்பான விஷயம் என்பதே புரிகிறது என்று ஆர்.ஜே பாலாஜி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- உதவி இயக்குனருடன் டேட்டிங்!.. அடங்காத ஐஸ்வர்யாவை கண்டித்த ரஜினி.. பயில்வான் பகீர் தகவல்…