Cinema History
ஒரே ஆண்டில் 10 படங்கள்!.. பாண்டியனை வீழ்த்திய அந்த குதிரை!.. நடந்தது இதுதான்..
தமிழ்சினிமாவில் கன்னக்குழி விழும் சிரிப்புக்குச் சொந்தக் கார நடிகர்கள் இருவர் தான். ஒன்று பிரபு. மற்றொன்று பாண்டியன். இவர்களில் பாண்டியனைப் பற்றி சில தகவல்களைப் பார்க்கலாம்.
பாண்டியன் வெற்றிப்படங்களைத் தந்த நேரத்தில் ஒரே ஆண்டில் 10 படங்கள் வரை நடித்து அசத்தியுள்ளார் பாண்டியன். நடிகர் ராமராஜன் இயக்கிய முதல் படம் மண்ணுக்கேத்த பொண்ணு. அந்தப் படத்தில் கதாநாயகன் பாண்டியன். படம் சூப்பர்ஹிட்.
ராமராஜன் 2வதாக இயக்கிய மருதாணி படத்திலும் பாண்டியன் செம மாஸ் காட்டினார். ஆண்பாவம் படத்தில் பாண்டியராஜனுடன் இணைந்து அதகளப்படுத்தினார் பாண்டியன். ரஜினியுடன் ஊர்க்காவல், குருசிஷ்யன் படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துப் பெயர் வாங்கினார். தொடர்ந்து பல படங்களில் அப்படிப்பட்ட ரோல்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
ஹீரோ, குணச்சித்திரம், நகைச்சுவை, வில்லன் என மாறி மாறி நடித்து ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவர் பாண்டியன். கடைசியாக இவர் குருநாதர் பாரதிராஜா சொன்னதற்கு இணங்க கிழக்குச்சீமையிலே படத்தில் எதுக்குப் பொண்டாட்டி என்னைச்சுத்தி வைப்பாட்டி என்ற பாடலில் நடித்து அனைவரும் மீம்ஸ் போடும்படி ஆனார்.
1995க்குப் பிறகு இவருக்குப் படவாய்ப்புகள் குறைந்து போனது. வருடத்திற்கு ஒரு படம் கூட நடிக்க முடியவில்லை. இதனால் மனச்சோர்வு அடைந்த பாண்டியன் சொந்தமாகப் படம் தயாரிக்க முயன்றார்.
தனக்குத் தெரிந்த மதுரையைச் சேர்ந்த நண்பரைத் தயாரிப்பாளர் ஆக்கி பந்தய குதிரைகள் என்ற படத்தை எடுத்தார். அந்தப் படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் திரைக்கே கொண்டு வர முடியாமல் மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்தார். இதனால் மதுப்பழக்கத்தில் அடிமையானார்.
இதையும் படிங்க… திருமணத்தில் கலாட்டா… பெல்ட் அடி… தெரியாத லிப்கிஸ்… ராம்கி – நிரோஷா காதலில் இவ்வளவு சோதனைகளா?..
அரசியலிலும் இணைந்த கூடா நட்பை வளர்த்துக்கொண்டார். அஜீத்தின் சிட்டிசன் படத்தில் அவரது வளர்ப்புத் தந்தையாக நடித்தார். சின்னத்திரை தொடரிலும் தலைகாட்டினார். கடைசியில் கல்லீரல் பிரச்சனை, மஞ்சள் காமாலையால் 49வது வயதிலேயே இறந்தார். இவரது மகன் ரகுபாண்டியனும் சினிமாவில் நுழைய ஆர்வம் காட்டி வருகிறார்.