பல நாள் பந்தம்! போனிகபூருக்காக என்ன வேணுனாலும் செய்யும் அஜித் - என்ன காரணம் தெரியுமா?

by Rohini |   ( Updated:2023-08-20 12:10:07  )
ajith
X

ajith

ஒரு காலகட்டம் வரை போனிகபூர் என்றால் அஜித்தையும் பற்றி பேசாமல் இருந்திருக்காது இந்த சமூக வலைதளம். தொடர்ந்து போனிகபூரின் தயாரிப்பில் மூன்று படங்கள் நடித்துக் கொடுத்ததன் மூலம் அஜித்தை தத்தெடுத்துக் கொண்டாரா போனிகபூர் என்றெல்லாம் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர்.

போனிகபூரும் அஜித்தின் மேல் ஒரு நல்ல மரியாதை வைத்திருந்தார். மரியாதை நிமித்தம் காரணமாக அஜித் வீட்டிற்கு போனி கபூர் வருவதும் போனி கபூர் வீட்டிற்கு அஜித் போவதுமாக இருந்தது. அப்படி என்ன பாலிவுட்டில் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறாரே அஜித் என்ற சந்தேகத்தையும் எழுப்பியது.

இதையும் படிங்க : உருகி உருகி காதலித்தவரை விட்டுப்பிரிந்த ஸ்ரீதேவி! இப்படி ஒரு கண்டீசனை போட்டா யாருதான் வாழ்வா?

அதற்கு ஒரே ஒரு காரணம் நடிகை ஸ்ரீதேவிதான் என்று சித்ரா லட்சுமணன் கூறினார். ஸ்ரீதேவியின் தந்தை மற்றும் தாய் மறைவிற்கு பிறகு சில காலம் படங்களில் நடிப்பதையே தவிர்த்து வந்திருக்கிறார். அந்த நேரத்தில் போனிகபூரின் அறிமுகம் கிடைக்க அவரை திருமணம் செய்து கொள்கிறார்.

கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீதேவி நடித்த படம் இங்கிலீஷ் இங்கிலீஷ் என்ற திரைப்படம். அந்த திரைப்படத்தில் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் அஜித் நடித்தார்.

அந்த சமயத்தில் தான் ஸ்ரீதேவி மீது அஜித்திற்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் கோலிவுட் நடிகர்களில் ஸ்ரீதேவி மீது மிகுந்த பற்றுள்ள நடிகராக அஜித் இருந்தாராம். அதுமட்டுமில்லாமல் அந்த இங்கிலீஷ் இங்கிலீஷ் படத்திற்காக அஜித் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தாராம்.

இதையும் படிங்க : கொல பசியில் இருக்கும் தனுஷ்! மீண்டும் தீனி போடக் காத்திருக்கும் அந்த கில்லர் இயக்குனர்

ஸ்ரீதேவியின் மீதுள்ள அந்த அன்பின் காரணமாகத்தான் போனிகபூருடன் தொடர்ந்து மூன்று படங்களில் பணியாற்றியிருக்கிறார் அஜித் என சித்ரா லட்சுமணன் கூறினார்.

Next Story