ஆஸ்கர் விழாவில் பேசிய அந்த வார்த்தை! - ஏ.ஆர்.ரஹ்மானை பாலிவுட் ஒதுக்க அதுதான் காரணமாம்!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன் தந்தையிடம் இருந்து இசை கற்றுக்கொண்டு அதில் இருந்த ஆர்வத்தால் ஆரம்பத்தில் விளம்பரங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல், லியோ காபி ஆகிய 300 இக்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களுக்கு இசையமைத்து தனது திறமையை வெளியுலகிற்கு காட்டி கொஞ்சம் கொஞ்சம் முன்னேற்றத்தை அடைந்தார்.

ar rahman

பின்னர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலே ஒட்டுமொத்த திரை ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து பெரும் புகழ் பெற்றார். அவரது மெலோடி இசை மனதை மயக்க வைத்தது.

அதன் பிறகு தமிழ், தெலுங்கு , இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு சூப்பர் ஸ்டார் ஹீரோக்கள் முதல் அறிமுகநாயகன்கள் படங்கள் என பாரபட்சம் இல்லாமல் எல்லோருக்கும் இசையமைத்துக்கொண்டு மிகப்பெரிய இசை ஜாம்பவான் என இளம் வயதிலேயே பெரும் புகழ் பெற்றார். 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளருக்காகவும் சிறந்த பாடலுக்காகவும் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்றார்.

Ar rahman

அந்த விழாவில் பேசிய ஆர். ரஹ்மான், தமிழில் ஒரு வார்த்தை மட்டும் பேச விரும்புகிறேன். " எல்லா புகழும் இறைவனுக்கே" என கூறிவிட்டு மேடையில் இருந்து கீழே இறங்கிச்சென்றார். இது உலகம் முழுக்க உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் மிகப்பெரிய பெருமை சேர்த்து. ஆனால், இதை பாலிவுட்காரர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

நீங்க இந்தியில் பேசியிருந்தால் உங்களை கொண்டாடியிருப்போம். அல்லது ஆங்கிலத்தில் பேசியிருந்தால் கூட பொதுவான மொழி என எடுத்திருப்போம். தமிழில் பேசியதை தான் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என கூறி அவரை ஒதுக்க ஆரபித்தார்கள். இதுதான் இந்தி படங்களில் இருந்து அவர் கொஞ்சம் கொஞ்சமாக விலகியதற்கு காரணம் என பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

 

Related Articles

Next Story