ஜெயிலர் படத்துல வரும் அந்த வசனம் தனுஷுக்குதான்!.. தலைவரின் மைண்ட் வாய்ஸை சொன்ன இயக்குனர்…

Published on: August 19, 2023
rajni
---Advertisement---

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில், ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் உளளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம், 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்களை வெளியாகி வருகிறது. இதற்கு முன்னர் நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படமும், இதற்கு முன்னர் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படமும், பெரிதாக ஓடாததால், இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.

இதையும் படிங்க- விக்ரம் தாண்டியாச்சி.. அடுத்து பொன்னியின் செல்வன்!. வசூலில் சக்கை போடு போடும் ஜெயிலர்…

இந்நிலையில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்தநிலையில், இந்த படம் குறத்து இயக்குநர் பிரவீன் காந்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் பல விஷயங்களை தெரிவித்துள்ளார். ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெரும் என்று நான் வெளியாவதற்கு முன்பே கூறினேன்.

அதே போல, வெற்றி பெற்றுள்து. இடையில் தமன்னா வரும் இடங்கள் கொஞ்சம் மெதுவாக போனது. பிறகு மீண்டும் நெல்சன் ஸ்டைலில் கதை வேகமாக நகரத்தொடங்கியது. எனக்கு படம், திரைக்கதை எல்லாமே பிடித்திருந்தது. படத்தில் ரஜினி அடிக்கடி, தன் மகனிடம் ‘அப்பா கிட்ட ஏதாச்சு சொல்லனுமா பா’ என்று கேட்பார்.

எனக்கு தெரிந்தவரை அது சூசகமாக தன் மகள் ஐஸ்வர்யாவுக்கும், மருமகன் தனுஷுக்கும் தான் கூறியிருக்கிறார். வீட்டில் பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து அவர்களிடம் நேராக பேச முடியாது. அதனால் தான் இந்த வசனத்தின் மூலமாக, தன்னிடம் ஏதாவது கூற வேண்டுமா என்று ரஜினி கேட்டுள்ளார்.

அவர் அந்த பிரச்சனைகளை நினைத்து மிகவும் கவலைப்பட்டிருப்பார். நேராக அவர்களிடம் கேட்க முடியாமல் இப்படி செய்துள்ளார் என்று நான் நினைக்கிறேன் என்று இயக்குநர் பிரவீன் காந்தி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- ஜெயிலர் பட வசூல்!.. கமலை பெருமூச்சு விட வைத்த சன் பிக்சர்ஸ்!.. என்னமா உருட்டுனாய்ங்க!…

prabhanjani

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.