நடிகர் வி.கே.ராமசாமியின் வளர்ப்பு மகனும், இயக்குனருமான ரகு வி.கே.ராமசாமி பற்றியும், அவரது நட்பு மற்றும் சிவாஜி பற்றியும் சில சுவாரசியமான விஷயங்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விகே.ராமசாமிக்கு நினைவாற்றல் அதிகம். சினிமா பற்றிய அறிவும் அதிகம். பெரிய காதல் மன்னனாகவே இருந்தார். அவரது நடிப்பு, கேரக்டர் என தனிப்பட்ட வாழ்;க்கையில் பிரின்ஸ் மாதிரி வளர்ந்தார். சொந்தமாக குதிரை பந்தயம் நடத்தினார்.
இதையும் படிங்க… எத்தனை படத்தை ஓகே பண்ணுவீங்க கவின்… லிஸ்ட்டில் இணைந்த ஜில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம்…
ஹைதராபாத்தில் நடந்தால் அங்கு போவார். குதிரைகளோடு இந்தியா முழுவதும் பிரயாணம் பண்ணினார். விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். பிரசாத் லேப்பை முதன் முதலாக வாங்கியவர் அவர் தான். பெரிய கலா ரசிகர். கர்ணன் படத்துல கடைசில வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை ரொம்பவே ரசிப்பார்.
சினிமாவுல அவரைப் போல ஒருத்தர் வாழ்ந்ததும் இல்லை. ஏமாந்ததும் இல்லை. 1945ல் அவர் நடித்த முதல் படம் நாம் இருவர். அப்போ சம்பளம் 300 ரூபா தான்.
ஒரு கட்டத்தில் பணம் இவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. நட்புக்கு முக்கியத்துவம் தருபவர். அவரது நட்புக்கு உதாரணம் நடிகர் திலகம் தான். 1945ல் சினிமாவுக்கு வந்தவர் தான் இவர். 1952ல் நடிகர் திலகம் வருகிறார். அப்போது இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். அப்போது இவர்களது நட்பு வளர்கிறது.
சிவாஜி வளர்ந்த காலகட்டத்தில் அப்பவே சில முக்கிய முடிவுகள் எடுத்தார். ஒரு நாள் வி.கே.ராமசாமியிடம், ராமு ஒரு கட்டத்தில் இந்த சினிமா உலகை நான் ஆளப்போறேன்னு வைராக்கியமுடன் சிவாஜி சொன்னார். அந்த அளவு அவருக்கு தன்னம்பிக்கை இருந்தது. முதலில் ஒரு மனுஷன் தன்னை நம்பணும். அவரோட நம்பிக்கை வீண்போகல. இப்போ அவர் சரித்திரம் ஆயிட்டாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… இல்லற வாழ்க்கையை சந்தோஷமாக தொடங்க சென்னைக்கு வந்த சூரி! அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
வி.கே.ராமசாமி நடிகர் திலகத்துடன் இணைந்து பல படங்கள் நடித்துள்ளா. பராசக்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜபார்ட் ரங்கத்துரை, பார் மகளே பார், தங்கப்பதக்கம், வசந்த மாளிகை, வாழ்க்கை, பணம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…