Categories: Entertainment News latest news

சமந்தா மார்க்கெட்டை உச்சத்தில் ஏற்றிய அந்த பாடல்… நாலு பக்கமும் கூப்பிடுறாங்க….

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல்வேறு மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு அமோக வரவேற்பு உள்ளது.

இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘ஓ சொல்றியா மாமா’ பாடல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது. அந்த பாடலில் ஆடிய சமந்தாவின் ரசிகர்கள் அவரை மீண்டும் ஒருமுறை இதுபோன்ற ஐட்டம் பாடல்களில் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

‘புஷ்பா’ படத்தின் “ஓ சொல்றியா மாமா” பாடல் 2021-ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட பாடல் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில், நடிகை சமந்தா இன்னொரு ஐட்டம் பாடலுக்கு டான்ஸ் ஆடலாம் என கூறப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த ஒரே  பாடலில் ஆடியதால் தற்போது தெலுங்கிலும்,ஹிந்தியிலும் மார்க்கெட் எகிறியுள்ளது.

இதையும் படியுங்களேன் …  நன்றி மறக்காத நல்ல மனிதன் விஜய் சேதுபதி.! நெகிழ்ந்துபோன தயாரிப்பாளர்.!

அந்த வகையில், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ‘லிகர்’ படத்தில் நடிகை சமந்தா குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த செய்தி தற்போது உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இந்த செய்தி உண்மையாக மாறினால் அது சமந்தாவின் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் ஆக மாற வாய்ப்பிருக்கிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Manikandan