எக்காலமும் போற்றும் சிறந்த நடிகர்களில் ஒருவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றதை விட இயலாதோருக்கு உதவிகளை அளவின்றி வாரி வழங்கும் வள்ளலாக இருந்ததாலே மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
எம்.ஜி.ஆர் சக்கரவர்த்தி திருமகள் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அதன் இறுதி கட்டப்பட படிப்பு மைசூரில் நடந்து முடிந்தது. எம்.ஜி.ஆர் தான் தங்கியிருந்த பிருந்தாவன் ஹோட்டலை காலி செய்து புறப்பட்டார். ஹோட்டலின் வாசலில் வந்து கொண்டிருந்தபோதுஅந்தப் படத்தின் தயாரிப்பாளரான ராமநாத செட்டியார் ஒட்டமும் நடையுமாக வந்து ”என்னங்க இப்படி பண்ணிட்டீங்களே.. இப்படி செய்யலாமா..”என்று பதறியபடி கேட்டார்.
”அப்படி என்ன செஞ்சுட்டேன்” என்று பொறுமையாக கேட்டார் எம்.ஜி.ஆர். ”ஹோட்டலின் பில்லை நீங்களே கட்டிடீங்களே என் படத்தில் வேலை பார்த்துவிட்டு பில்லை நீங்க கட்டலாமா..?” என்று கேட்டார் செட்டியார். அதற்கு எம்.ஜி.ஆர் ”நான் என் மனைவியுடன் வந்திருக்கிறேன். மேலும் என் கதாசிரியர் ரவீந்திரனும் உடன் அழைத்து வந்திருக்கிறேன்.. எனக்கு நீங்கள் செலவு செய்யலாம் ஆனால் அவர்களுக்கு சேர்த்து நீங்கள் செலவழிப்பது தவறு” என்று கூறியுள்ளார்.
பின்னர் ஹோட்டல் பில் தொகையை செட்டியார் கொடுத்த பின்பும் வாங்க மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர். காரின் பெட்ரோல் செலவுக்காக இந்த பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பணிந்து கேட்டுள்ளார் செட்டியார். அதற்கு எம்.ஜி.ஆர் ” நான் சென்னை செல்லவில்லை நான் இப்படியே மைசூரை சுற்றி பார்த்து விட்டு அப்படியே சென்னை செல்கிறேன் இந்த பணம் எனக்கு தேவையில்லை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.
தமிழ் சினிமாவில் இன்று சம்பளம் மட்டும் பல கோடிகள் வாங்கிக் கொண்டு படபிடிப்பு தளங்களில் அவருக்கு மட்டும் இல்லாமல் ஆவருடன் அனைவருக்கும் அவருடன் சேர்த்து செலவு வைப்பது இன்றைய காலத்தின் நடிகர்களின் வழக்கமாக உள்ளது. எம்.ஜி.ஆரின் இந்த பழக்கம் மற்ற நடிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாகும். அதனால் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இடத்தை எந்த ஒரு நடிகராலும் அரசியல்வாதியாலும் மக்களின் மனதில் அவருடைய இடத்தை நிரப்ப முடியவில்லை.
Pushpa 2:…
தமிழ் சினிமாவில்…
சொர்க்கவாசல் திரைப்படம்…
Lucky Bhaskar:…
தனது வருங்கால…