கோடி கோடியா சம்பளம் வாங்கும் நடிகர்! உதவினு நின்ன டிரைவர் - அவர் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல முன்னனி நடிகர்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்குவதிலேயே குறிக்கோளாக இருக்கிறார்கள். படம் ஓடினாலும் ஓடவில்லை என்றாலும் 100கோடி, 150 கோடி என சம்பளத்தில் கறார் காட்டி வருகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர்களுக்கு எதாவது பிரச்சினை என்றால் தன்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற மனம் ஒரு சில நடிகர்களுக்கு வருவதில்லை.
அதுமட்டுமில்லாமல் சமுதாயத்தில் மிகவும் நலிந்து கிடக்கும் எத்தனையோ பேர் மிகவும் வேதனைப்பட்டுக் கிடக்கின்றனர். அவர்களை தன் ரசிகர்களாக பாவித்துக் கூட அவர்கள் உதவிகளை செய்ய முன்வருவதில்லை.
இதையும் படிங்க : சிவாஜி படப்பிடிப்பில் ரஜினி செய்த வேலை!.. நெகிழ்ந்து போன நடன கலைஞர்கள்!…
ஆனால் இவர்களுக்கு மத்தியில் கேபிஒய் பாலா ஈரோட்டில் இருக்கும் ஒரு மலைவாழ் கிராமத்து மக்களின் மருத்துவ வசதிக்காக சமீபத்தில் தன்னுடைய சொந்தச்செலவில் அதாவது 5 லட்சம் மதிப்புள்ள ஒரு ஆம்புலன்சை அன்பளிப்பாக அளித்திருக்கிறார். இவர்தான் இப்போது ரியல் சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.
இந்த சம்பவத்துக்கு இடையில் ஒரு பெரிய முன்னனி நடிகராம். பல கோடி சம்பளம் வாங்கும் நடிகராம். அவரிடம் 7 கார்கள் இருக்கின்றதாம். ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு டிரைவராம். அதுவும் அந்த நடிகருக்கு எந்த டிரைவரை அனுப்புவது என்பதை அந்த நடிகரின் மனைவிதான் முடிவு பண்ணுவாராம்.
அதோடு மட்டுமில்லாமல் அந்த டிரைவர்களுக்கு போடப்படும் கட்டளை என்னவென்றால் எக்காரணம் கொண்டும் போகும் போதும் சரி வரும் போதும் சரி. ஐயாவிடம் பேசவே கூடாது என்பதாம். அப்படி ஒரு நாள்
இதையும் படிங்க : ரஜினியை மக்கள் திலகம்னு சொன்னா நல்லா இருக்குமா?.. விஜய் ரசிகர்களுக்கு தெளிவா பாடம் புகட்டிய சத்யராஜ்!..
அப்படி பேசும் போது அந்த டிரைவர் தன் மகனுக்கு நுரையீரல் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். அதற்காகத்தான் பணம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் கூறினாராம். அதற்கு அந்த நடிகர் தூக்கிக் கொடுத்த தொகை எவ்வளவு தெரியுமா? வெறும் 7000 ரூபாயாம்.
ஆனால் மறுநாள் இந்த விஷயம் அந்த நடிகரின் மனைவிக்கு தெரியவர அந்த டிரைவரை வேலையில் இருந்தே நிறுத்தி விட்டாராம். கோடியில் புரளும் இந்த நடிகர்கள் அடையும் நிலைமை கடைசியில் என்னவாக இருக்கும் என்றே யோசிக்க வைக்கின்றது. இந்த சுவாரஸ்ய சம்பவத்தை வலைப்பேச்சு அந்தனன் கூறினார்.