
Cinema News
கமல் கூறிய அந்த வார்த்தை… அஜித்தை வச்சி செய்து வரும் நெட்டிசன்கள்…
அஜித் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் அடிக்கடி சமூகவலைதளத்தில் சண்டை போடுவது உண்டு. விஜய் ரசிகர்கள் அஜித்தை கலாய்ப்பதும், அஜித் ரசிகர்கள் விஜய்யை கலாய்ப்பதுமாகத்தான் இருக்கிறது. சினிமாவில் தாண்டி அஜித்தும், விஜயும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் கூட அவர்களது ரசிகர்கள் சண்டையிட்டு கொண்டேதான் இருக்கிறார்கள்.
இவர்களின் சண்டைக்கு தீர்வு அஜித் , விஜய் இருவரும் இணைந்து ஒன்றாக படம் நடித்தால் மட்டுமே இருக்கும். இந்நிலையில், கமல்ஹாசன் சமீபத்தில் பேசிய வீடியோ ஒன்றை விஜய் ரசிகர்கள் அஜித் பெயரை டேக் செய்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்களேன்- நீண்ட வருடத்திற்கு பின் இறங்கி ஆடிய அதர்வா.. குருதி ஆட்டம் தாண்டவமா.? தடுமாற்றமா.? விமர்சனம் இதோ…
அந்த வீடியோவில் கமல் ” ஒரு விஷயம் கஷ்டப்படாமல் கிடைக்கவே கிடைக்காது. அப்படி இருக்கும்போது எனக்கு வேர்க்குது… இடுப்பு வலிக்குது இதெல்லாம் போய் ஆடியன்ஸ்கள் கிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா..? அவர்கள் பார்க்கும் பொழுது என் கால் உடைந்து இருந்தாலும் நன்றாக நடனம் ஆடுகிறாறா என்பதை பார்ப்பது தான் அவர்களுடைய வேலை.
எனக்கு அடிபட்டிருக்கு கோயில் வாசலில் உட்கார்ந்து இருக்கிற பிச்சைக்காரன் மாதிரி என்னுடைய காயத்தை காட்டி காசு வாங்க மாட்டேன் என் திறமையை காட்டி காசு வாங்குவேன்” என்று வைராக்கியமாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை அஜித்தை சுட்டி காட்டி நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.