முன்னாள் உலக அழகிக்கு 56 வயது காதலன்… டிவிட்டரில் சரமாரி கேள்வி.. வெளியான அதிரடி பதில்…

Published on: July 15, 2022
---Advertisement---

ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுடன் டேட்டிங் செய்வதாக தனது டிவிட்டரில் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டது, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இது குறித்து, சமூக வலைதளபக்கத்தில் நிறைய சலசலப்பை உருவாக்கியது. அதாவது, இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று பலர் யூகிக்கின்றனர். இருந்தாலும், இருவரும் வெறும் டேட்டிங் மட்டும் தான் செய்கிறோம் என்று லலித் மோடி தெளிவுபடுத்தினார்.

இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு விரிவான விளக்கமளித்த லலித் மோடி,  இப்போதுதான் மாலத்தீவு உட்பட உலக நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் வந்திருக்கிறேன். சுஷ்மிதா சென் உடன் புதிய வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறேன். நாங்கள் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது இருவரும் டேட்டிங்கில்தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்களேன் – இப்படி தான் சாகனும்னு பிரதாப் போத்தன் ஆசைப்பட்டார்… உண்மையை போட்டுடைத்த அஜித் பட நாயகி…

இதற்கிடையில், இதுவரை திருமணம் செய்துகொள்ளாத சுஷ்மிதா சென்னுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களை சுஷ்மிதா சென் தத்தெடுத்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், பணமோசடி வழக்குகள் தொடர்பான விசாரணைகளுக்கு மத்தியில் லலித் மோடி 2010 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறிய பின்னர் லண்டனில் இருக்கிறார்.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பரில், சுஷ்மிதா சென் ரோஹ்மான் ஷாலை காதல்  செய்து வந்த நிலையில், திடீரென கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் இருந்து பிரிவதாக அறிவித்தது குறிப்படத்தக்கது.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.