உண்மையான கலைஞனா இருந்தா இத செஞ்சிருக்கனும்.. இளையராஜா, ரஹ்மானை வெளுத்து வாங்கிய ஸ்ரீபிரியா..
தமிழ் சினிமாவில் இசையில் மாமேதைகளாக இருக்கும் இளையராஜா மற்றும் ஏஆர். ரகுமானை கோபத்தின் எல்லைக்கே சென்று நடிகை ஸ்ரீபிரியா வெளுத்து வாங்கிய சம்பவம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீபிரியா. ஸ்ரீதேவிக்கு சரியான விதத்தில் டஃப் கொடுத்த நடிகையாக ஸ்ரீபிரியா விளங்கினார்.
இன்று தமிழ் நாடே கொண்டாடக்கூடிய நடிகர்களாக இருக்கும் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருடனும் அதிகம் சேர்ந்து நடித்த நடிகையாக ஸ்ரீபிரியா திகழ்கிறார். மேலும் ரஜினி மற்றும் கமல் ஆகியவர்களின் வாழ்க்கை வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஸ்ரீபிரியாவின் பெயர் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை வரலாறு முற்றுப் பெறாது.
அந்த அளவுக்கு அவர்களுடன் ஸ்ரீபிரியாவின் ஈடுபாடு பெரும்பங்கு வகிக்கின்றது. எதையும் மனதில் தோன்றுவதை
படக்கென பேசக்கூடியவர். யாராக இருந்தாலும் முகத்துக்கு எதிராக பேசக்கூடிய தைரியசாலியான நடிகை. தற்போது தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டு கமலின் மக்கள் நீதி மையக் கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவர் தான் தற்போது இளையராஜாவை பற்றியும் ஏஆர். ரகுமானை பற்றியும் வெகுவாக பேசியிருக்கிறார். ஸ்ரீபிரியா கூறியதாவது: “இந்திய விருதுகளிலேயே மிக உயரிய விருதாக கருதப்படுவது பத்ம விருதுகள். அந்த விருதை பெறுவதற்கு என்று சில தகுதிகள் இருக்க வேண்டும்.
இதில் இளையராஜாவும் ரஹ்மானும் இருவருமே கண்டிப்பாக பழம்பெரும் இசைமேதையான எம்.எஸ்.வி யை பின்பற்றி தான் வந்திருப்பார்கள். அவரின் இசை தாக்கம் ஓரளவாவது இவர்களிடம் கண்டிப்பாக இருக்கும். எம்.எஸ்.வி இசையில் எப்பேற்பட்ட வெற்றிப் பாடல்கள் வந்திருக்கின்றன என்பதும் அந்தக் காலத்தில் பெரிய ஆளுமைகளாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி மற்றும் பல நடிகர்களின் படங்களுக்கும் எம்.எஸ்.வியின் இசை தான் பெரிய வரப்பிரசாதம் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
அப்படி பட்டவருக்கு மத்திய அரசு இதுவரை பத்ம விருதை அறிவிக்கவில்லை. அதை எதிர்த்து அதே துறையில் இருந்து வந்தவர்களும் எம்.எஸ்.வியை பின்பற்றியவர்களுமான இளையராஜாவும் ரஹ்மானும் ஒரு தடவை கூட குரல் கொடுக்கவில்லை. ஆனால் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பத்ம விருதுகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள்.
இதையும் படிங்க : மறுபடியுமா? ரஜினியை வச்சு செஞ்சதே போதும்.. ரிஸ்க் எடுக்கும் விஜயகாந்தின் மாஸ் ஹிட் பட இயக்குனர்..
அப்போ தனக்கு கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்களா? ஆனால் பாடகி ஜானகி அவருக்கு கிடைத்த பத்ம விருதை தூக்கி எறிந்தார். எம்.எஸ்.விக்கு கிடைக்காத விருது தனக்கு வேண்டாம் என தூக்கி எறிந்தார். ஆனால் இவர்கள் இருவரும் அப்படி ஒரு காரியத்தை செய்யவில்லை. எம்.எஸ்.வி தகுதியானவர் இல்லை என்றால் கூட இதைப் பற்றி பேசுவதில் ஒன்றுமில்லை. ஆனால் அவர் எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்? ஆகவே இந்த விஷயத்தில் இளையராஜா , ரஹ்மான் மீது தனக்கு வருத்தம் இருக்கிறது” என்று ஸ்ரீபிரியா கூறினார்.