அந்த நடிகரின் விவாகரத்துக்கு காரணமும் அவர்தானா?!.. என்னப்பா சொல்றீங்க?!..

இப்போதெல்லாம் தமிழ் சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது அதிகரித்துக்கொண்டே போகிறது. கருத்து வேறுபாடு, வேறு ஒருவருடன் தொடர்பு என விவாகரத்துக்கு பின்னால் பல முக்கிய காரணங்கள் இருக்கிறது. நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து 17 வருடங்கள் கழித்து பின்னர் பிரிந்திருக்கிறார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷும் தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அறிவித்திருக்கிறார். அவருக்கு முன்னர் திரைத்துறையை சேர்ந்த பலரும் விவாகரத்து செய்து கொண்டவர்கள்தான். பார்த்திபன், அமலாபால், சமந்தா, விஷ்ணு விஷால் என பெரிய லிஸ்ட்டே இருக்கிறது.

இதையும் படிங்க: சீக்கிரமே திருமணம் செய்துக் கொள்ளப் போகும் ரஜினி, கமலின் ரீல் மகள்.. வருத்தத்தில் இளைஞர்கள்!..

இந்நிலையில்தான் பிரபலமான நடிகரும், இயக்குனரின் தம்பியுமான தனது பெயரில் வெற்றியை வைத்திருக்கும் அந்த நடிகரும் தனது மனைவியை பிரிய உள்ளதாகவும், கணவன் - மனைவி இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்து விட்டார்கள் என்றும் தகவல் கசிந்தது. அதை நிரூபிக்கும் வகையில் நடிகரின் மனைவி இன்ஸ்டாவிலிருந்து கணவர் தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் தூக்கிவிட்டார்.

ஆனால், ‘நல்லாத்தானே போயிட்டு இருந்தது.. திடீர்னு என்னாச்சி’ என்கிற கேள்வி திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எழுந்திருக்கிறது. இருவருமே இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஜோடியாக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வந்தவர்கள்தான்.

இதையும் படிங்க: ஒரு படத்துல நடிச்சதே போதும்! விஜய் தொடர்ந்து வில்லனா நடிக்காததற்கு இவங்கதான் காரணமா?

இந்நிலையில், பலருக்கும் விவாகரத்து வாங்கி கொடுத்த அந்த நடிகருடன் ஒரு பிரச்சனை ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு பார்ட்டிக்கு போயிருந்த போது நடிகரின் மனைவியிடம் அந்த நடிகர் எல்லை மீறியதாகவும், இதனால் கோபப்பட்ட வெற்றி நடிகர் அவரிடம் சண்டைபோட்டுவிட்டு அங்கிருந்து மனைவியை கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார் என சொல்லப்படுகிறது.

ஒருபக்கம், மாமியாரின் தலையீட்டால் மற்ற தயாரிப்பாளர்களின் படங்களில் நடிக்க முடியாமல் போனதாகவும், மாமியார் எடுத்த படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் விரக்தி அடைந்த நடிகர் வீட்டில் சண்டை போட அதுவே விவாகரத்து வரை கொண்டு போனதாகவும் சொல்லப்படுகிறது.

 

Related Articles

Next Story