Tamil Actors: சினிமாவுக்கு வருவதே பணம் சம்பாதிக்கத்தான் என்ற மனநிலையில் வரும் எத்தனையோ நடிகர்கள் மத்தியில் நட்புக்காக பணமே வேண்டாம் என நடித்துக் கொடுத்த நடிகர்களை பற்றித்தான் நாம் இப்பொழுது இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம் .வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சினிமாவும் அடுத்தடுத்த வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
ஆரம்ப காலங்களில் ஒரு நாடகமாகவே பார்க்கப்பட்ட சினிமா இப்போதைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அதனுடைய வளர்ச்சியும் மாறி இருக்கின்றன. புதுப்புது வார்த்தைகள் புதுப்புது தொழில்நுட்பங்கள் என அடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது சினிமா. அந்த வகையில் கேமியோ என்ற ஒரு வார்த்தை சமீப காலமாக நம் காதுகளில் அதிகமாகவே ஒலித்துக் கொண்டு இருக்கின்றது.
இதையும் படிங்க: மாணவர்களிடம் விஜய் கேட்ட கேள்வி… பலத்த கோஷத்துடன் அவர்கள் சொன்ன பதில்
அதாவது நட்பிற்கு அடையாளமாகவோ அல்லது ஒரு படத்தின் ப்ரோமோசனை பெரிய அளவில் கொண்டு போவதற்கு பெரிய பெரிய நடிகர்களை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து அதன் மூலம் வியாபாரம் தேடும் முறைதான் இந்த கேமியோ. இது அப்போதைய காலகட்டத்தில் இருந்து வந்தாலும் இந்த தலைமுறையில் தான் இதனுடைய பயன்பாடு அதிகமாகவே தெரிகின்றது.
தமிழ் மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் கேமியோ ரோல் என்பது மிகவும் பிரபலமாகிவிட்டது. அந்த வகையில் கேமியோ ரோலில் நடித்து அதுவும் காசு வாங்காமல் நடித்த நடிகர்களை பற்றி தான் இதில் நாம் பார்க்க இருக்கிறோம். காஞ்சனா படத்தில் சரத்குமார் ஒரு கெஸ்ட் ரோலில் வந்து நடித்திருப்பார். அதுவும் திருநங்கையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
இதையும் படிங்க: தல.. விஜய் ஸ்கோர் பண்றார்!. போட்டோவ இறக்கி விடுங்க!.. அஜித்தை பங்கம் பண்ணும் பிரபலம்…
அந்த ரோலுக்காக அந்த படத்தில் சரத்குமார் சம்பளமே வாங்கவில்லையாம். அடுத்து ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த இங்கிலீஷ் விங்கிலீஷ் என்ற படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோலில் அஜித் நடித்திருப்பார். ஸ்ரீதேவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார் அஜித். அந்த ரோலுக்காகவும் அஜித் காசே வாங்கவில்லையாம்.
அடுத்ததாக எதிர்நீச்சல் படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருப்பார் நயன்தாரா. தனுஷ் உடன் இருந்த நட்பு காரணமாக அந்த ஒரு பாடலுக்கு நயன்தாரா சம்பளம் வாங்க வில்லையாம். அதன் பிறகு விஜய் வளர்ந்து வரும் நேரத்தில் அவருடைய மார்கெட்டை உயர்த்தும் நோக்கத்தில் செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: ரசிகர்களிடம் இருந்து நடிகரை காப்பாற்றிய அஜீத்… என்ன ஒரு தெனாவெட்டுன்னு பாருங்க..!
அந்த ரோலுக்கும் விஜயகாந்த் சம்பளமே வாங்கவில்லையாம். அதேபோல் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஹேராம் படத்தில் ஷாருக்கான் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து நடித்துக் கொடுத்திருப்பார். அதிலும் ஷாருக்கான் சம்பளமே வாங்கவில்லையாம். இவர்கள் வரிசையில் சூர்யாவும் ஒருவர். கமல் நடித்த விக்ரம் படத்தில் ஒரு வெயிட்டான ரோலில் ரோலக்ஸாக வந்து கலக்கியிருப்பார். அதில் சூர்யாவும் சம்பளமே வாங்கவில்லையாம். இப்படி இன்னும் நிறைய நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
டோலிவுட்டின் இளம்…
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…