வந்த வேகத்திலேயே திரும்பிப் போன வாரிசு நடிகர்கள்!.. பரிதாப நிலைக்கு என்ன காரணம் தெரியுமா..?

by ராம் சுதன் |
actors fe img
X

actors fe img

சினிமாவில் அறிமுகம் கிடைப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அறிமுகம் கிடைத்தாலும் மக்களிடையே பிரபலம் அடைவது அதைவிட கடினமான ஒன்று. அதில் வெகு சிலரே வெற்றி காண்கிறார்கள். இதில் வாரிசு நடிகர்கள் எளிதாக சினிமாவில் நுழைந்தாலும் அவர்களுக்கான வெற்றி என்பது கானல் நீர் போல காணாமலே போனது. யார் யார் அப்படி வந்த வேகத்திலேயே காணாமல் போனது என்பதை இப்போது பார்க்கலாம்.

அருண் விஜய் :

நடிகர் விஜயகுமாரின் மகன் என்ற விசிட்டிங் கார்டோடு தமிழ் சினிமாவில் நுழைய அறிமுகம் கிடைத்தது. விஜய்,அஜித் தமிழ் சினிமாவில் அவர்களுடைய கேரியரை ஆரம்பிக்கும் பொழுதே இவரும் ஆரம்பித்தார். ஆரம்ப காலத்தில் சாக்லேட் பாய் கேரக்டரில் நடித்த வந்தாலும் அவருக்கென்று பெயர் சொல்லும் அளவிற்கு எந்த படமும் பெரிதாக வெற்றி கொடுக்கவில்லை.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடித்து தனக்கான பதிப்பை பதித்தார் அருண் விஜய். அதன் பிறகு தடம்,தடையற தாக்க போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது. அதன் பிறகு எந்த படமும் பெரிதாக ஓடவில்லை கடைசியாக ஹரி இயக்கத்தில் வெளிவந்த யானை படம் படுதோல்வி அடைந்தது. தமிழ் சினிமாவில் இன்று வரை தனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் நடிகராகவே உள்ளார் அருண் விஜய்.

விக்ரம் பிரபு :

பிரபு சாலமன் இயக்கத்தில் இவரது நடிப்பில் வெளியான கும்கி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி கொடுத்தாலும் அடுத்தடுத்து வெளியான படங்கள் அனைத்தும் அட்டர் பிளாப் படங்களாகவே அமைந்தது. இதற்கான காரணம் அவருடைய தாத்தா சிவாஜி கணேசனோடு ஒப்பிடுவது தான். அவர் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தன்னுடைய உடல் மொழியை மாற்றக்கூடியவர்.

ஆனால் விக்ரம் பிரபுவிடம் இந்த மாதிரி தனித்து சொல்லக்கூடிய வகையில் எதுவுமே இல்லை. விக்ரம் பிரபுவின் தொடர் தோல்விக்கு முக்கிய காரணமே அவரின் தாத்தாவோடு ஒப்பிடுவது தான். இதையெல்லாம் தவிர தனக்கான சரியான கதையை தேர்வு செய்து நடித்தால் அவருக்கு வெற்றி நிச்சயம் என சினிமா விமர்சகர் சூபேர் கூறியுள்ளார்.

கௌதம் கார்த்திக் :

நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான கௌதம் கார்த்திக் சினிமாவில் அவருடைய முதல் படமே இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடித்தார். என்னதான் சினிமாவில் முதல் படத்திலேயே மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் படம் மூன்று நாட்களுக்கு மேல் ஓடாமல் படுதோல்வி அடைந்தது. அதன் பின் வெளிவந்த எந்த திரைப்படமும் அவருக்கென்று ஒரு பெயரை பெற்று கொடுக்கவில்லை.

இவரது தொடர் தோல்விக்கு முக்கிய காரணமாக விளங்குவது அவருடைய அப்பா கார்த்திக்குடன் ஒப்பிடுவது தான். மேலும் கதைகளை தேர்வு செய்யும் விதத்திலும் கோட்டை விடுவது. போன்ற காரணங்களால் தான் இவரும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். தனக்கான சரியான கதையை தேர்வு செய்து தன்னுடைய திறமை வெளிப்படுத்தினால் இவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருவார் என சுபேர் தெரிவித்துள்ளார்.

சாந்தனு பாக்யராஜ் :

பாக்யராஜ் தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்,இயக்குனர்,நடிகர் என பல துறையில் தன்னுடைய திறமையை காட்டினார். இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவ அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவரது மகன் சாந்தனு பாக்யராஜ் தமிழ் சினிமாவின் சக்கரகட்டி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் எந்த திரைப்படமும் அவருக்கான வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு சில படங்கள் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

அவரின் தந்தையின் வெற்றிக்கு முக்கிய காரணமே அன்றைய காலகட்டத்தில் இருந்த சூழ்நிலை கலாச்சாரம் வேறு. அதனால்தான் அன்று அவரால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் இன்று சமூக கலாச்சாரம் சினிமா மீதான பார்வை எல்லாம் மாறிவிட்டது. அதுக்கு ஏற்றார் போல் சாந்தனு தன்னை மாற்றிக் கொண்டு சரியான கதைகளை தேர்வு செய்தால் தொடர் வெற்றி படங்களை இவராலும் கொடுக்க முடியும். தமிழ் சினிமாவில் அவர் தவறவிட்ட வெற்றி படங்கள் பல. அந்த வாய்ப்பை மட்டும் சரியாக பயன்படுத்தி இருந்தால் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்திருப்பார். இவ்வாறு நேர்காணல் ஒன்றில் சுபேர் தெரிவித்துள்ளார்

Next Story