முதல் காட்சியிலேயே மயங்கி விழுந்த நடிகை! – எல்லாத்துக்கும் மணிரத்னம்தான் காரணம்!..

by Rajkumar |
maniratnam
X

maniratnam

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களுக்கு பிரபலமானவர் மணிரத்னம். தனக்கென தனி ஒளிப்பதிவு முறையையும், வசன முறையையும் கொண்டிருப்பவர் மணிரத்னம். எனவே மணிரத்னம் படத்தை பார்த்த உடனேயே எளிதாக அது அவரது திரைப்படம் என்பதை கண்டறிய முடியும்.

அவர் படத்திற்கு வரவேற்பு இருப்பதால் பெரிய பெரிய கதாநாயகர்கள் கூட மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்படுவதுண்டு. ஆனால் அவர் படத்தில் நடிக்கும்போது அதிக நடிப்பை வெளிப்படுத்தியாக வேண்டும். அவருக்கு திருப்தி ஏற்படாத வரை ஒரே சீனை மீண்டும் மீண்டும் எடுத்துக்கொண்டிருப்பார்.

Actress_Vinodhini

Actress_Vinodhini

2013 ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படம் கடல். நடிகர் கெளதம் கார்த்திக் இந்த படத்தின் மூலமாகதான் அறிமுகமானார். அப்போதைய காலக்கட்டத்தில் சினிமாவில் புதுமுக நட்சத்திரமாக அறிமுகமாகியிருந்தார் நடிகை வினோதினி.

கடல் படத்தில் நடந்த சம்பவம்:

கடல் படத்திற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும், பெரிய படம் என அவர் நடித்த முதல் படம் கடல்தான். அந்த படத்தில் மீன் விற்கும் பெண் கதாபாத்திரம் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. மணிரத்னம் படம் என்பதால் அதற்காக வெகுவாக தயாராகி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார் வினோதினி.

maniratnam

maniratnam

ஆனால் அவர் நடிப்பு மணிரத்னத்திற்கு பிடிக்கவில்லை. மொத்தமாக மாற்றி நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் மீன் விற்கும் பெண் வெற்றிலை, பாக்கு போட்டுக்கொள்ள வேண்டும் என கூறி அவரிடம் வெற்றிலை, பாக்கு கொடுத்துள்ளனர். ஆனால் அதில் புழுவெல்லாம் இருந்துள்ளது.

வெற்றிலை, பாக்கையும் வாயில் போட்டுக்கொண்டு உச்சி வெயிலில் மறுபடி மறுபடி நடித்து இறுதியில் வாந்தியெடுத்து மயக்கம் போட்டு விழுந்துள்ளார் நடிகை வினோதினி. இது ஒரு மறக்க முடியாத சம்பவம் என ஒரு பேட்டியில் இந்த நிகழ்வை அவர் பகிர்ந்துள்ளார்.

Next Story