Cinema History
அரைநாள் வந்து நடிங்க, தமிழ்நாடே உங்கள பத்தி பேசும்..நடிகைக்கு அதிர்ச்சி கொடுத்த இயக்குனர்!..
தமிழ் சினிமாவில் படம் பெரும் ஹிட் கொடுக்கும்போது கூடவே அது படத்தின் கதாநாயகன், கதாநாயகியையும் பிர்பலமாக்கிவிடுகிறது. ஆனால் சில நேரங்களில் படங்கள் பெரும் ஹிட் கொடுத்தாலும் அதில் பணிப்புரிந்த சின்ன சின்ன துணை கதாபாத்திரங்கள் பெரிதாக பிரபலமாவதில்லை.
அவர்களுக்கு முக்கியமான கதாபாத்திரம் அமையாமல் இருப்பதே அதற்கு காரணமாக உள்ளது. பல நடிகர் நடிகையர்கள் இறுதிவரை பெரும் கதாபாத்திரங்களே கிடைக்காமல் சின்ன கதாபாத்திரங்களிலேயே நடித்து வந்துள்ளனர்.
நடிகை நீலிமா ராணியும் அவர்களில் ஒருவர் இவர் 1992 ஆம் ஆண்டு தேவர் மகன் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால் திரைப்படங்களில் அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இதனால் சின்ன திரையிலும் நாடகங்களில் இவர் நடித்து வந்தார். தமிழில் நான் மகான் அல்ல, மொழி போன்ற சில படங்களில் சற்று முகம் தெரியும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், பெரும் கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
படத்தில் கிடைத்த வாய்ப்பு:
இந்த நிலையில் தற்சமயம் ஆகஸ்ட் 16 1947 திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் என்.எஸ் பொன்குமார் அழைத்தப்போது படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. படம் வெளியான பிறகு உங்கள் கதாபாத்திரம்தான் மக்களால் அதிகமாக பேசப்படும் என கூறியுள்ளார்.
இதை கேட்ட நீலிமா, எவ்ளோ நாள் சார் கால்ஷூட் வேணும் என கேட்டுள்ளார். அரை நாள் போதும் என கூறியுள்ளார் இயக்குனர். அரைநாளை வைத்து என்ன எடுப்பார் என யோசனையுடன் படத்தில் நடித்து கொடுத்துள்ளார் நீலிமா ராணி.
இந்த திரைப்படத்தில் கெளதம் கார்த்திக்கு அம்மாவாக நடித்துள்ளார். படம் முழுக்க கெளதம் கார்த்தி தனது அம்மாவை குறித்து பேசி கொண்டிருப்பதால் 5 நிமிடம் வந்தாலும் அந்த அம்மா கதாபாத்திரம் மக்கள் மத்தியில் வலுவாக நின்றது.
இயக்குனர் சொன்ன மாதிரியே தற்சமயம் படம் பார்த்தவர்கள் நீலிமாவின் கதாபாத்திரத்தை புகழ்ந்து பேசி வருகின்றனர்.