Connect with us
Sivaji, Prabhu

Cinema History

ஒரே நேரத்தில் தந்தை, மகனுக்கு ஜோடியாக நடித்த நடிகை!.. 80ஸ் கிட்ஸ்களின் கனவு தேவதை இவர்தான்!

80களில் தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அம்பிகா. இவர் பாக்கியராஜின் அந்த ஏழு நாட்கள் படத்தின் மூலம் பிரபலமானவர். கேரளாவைச் சேர்ந்த இவர் பல மலையாளப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். அதே போல அங்கு கதாநாயகியாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

கடல் மீன்கள், சகலகலா வல்லவன், வாழ்வே மாயம் என கமல் நடித்த படங்களில் அம்பிகாவின் நடிப்பு தனி முத்திரையைப் பதித்தன. ரஜினியுடன் இவர் நடித்த எங்கேயோ கேட்ட குரல் இன்று வரை பேசப்படுகிறது. அவ்வளவு அற்புதமான நடிப்பு.

Actress Ambika

Actress Ambika

ஒரு கட்டத்தில் இவருக்கு இக்கட்டான ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. தந்தையுடன் ஜோடியாகவும், மகனுடன் ஜோடியாகவும் நடிக்க வேண்டும். அதுவும் அப்போது உச்சத்தில் இருக்கும் எந்த நடிகையாவது இதற்கு சம்மதிப்பாரா? ஆனால் தைரியமாக அம்பிகா சம்மதித்து நடித்தார்.

அவர்கள் வேறு யாருமல்ல. நடிகர் திலகம் சிவாஜியும், அவரது மகன் இளையதிலகம் பிரபுவும் தான். சிவாஜியுடன் வெள்ளை ரோஜாவும், பிரபுவுடன் திருப்பம் படத்திலும் இவர் தான் ஜோடி. இது அவருக்கு ஒன்றும் பின்னடைவைக் கொடுக்கவில்லை.

Kamal, Ambika

Kamal, Ambika

அடுத்தடுத்த சூப்பர்ஹிட் படவாய்ப்புகளுக்கு வழிவகுத்தன. அதன்பிறகு தான் காக்கிச்சட்டை, நான் சிகப்பு மனிதன், உயர்ந்த உள்ளம், படிக்காதவன், காதல் பரிசு, மிஸ்டர் பாரத், விக்ரம், நானும் ஒரு தொழிலாளி என கமலுக்கும், ரஜினிக்கும் மாறி மாறி நடித்து அசத்தினார் அம்பிகா. இதன்மூலம் இருதரப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புக்குள்ளானவர் என்ற உயரிய அந்தஸ்துக்கு ஆளானார் அம்பிகா.

1988ல் பிரேம்குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். 96ல் விவாகரத்து ஆனார். பின் 2002ல் நடிகர் ரவிகாந்த் என்பவருடன் திருமணம். அடுத்த 2 ஆண்டுகளில் விவாகரத்து. அதனைத் தொடர்ந்து 20 வருடங்களாக தனது மகன்களுடன் தான் வாழ்ந்து வருகிறார் அம்பிகா என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Continue Reading

More in Cinema History

To Top