நடிகையாக இருந்து இயக்குனராக மாறிய கதாநாயகிகள்.. கைக்குட்டை ராணியாக ஜொலிக்கும் தேவயாணி

deva
சினிமாவை பொறுத்தவரைக்கும் யார் என்ன இடத்தில் இருப்பார்கள் என்று சொல்லவே முடியாது. காலங்காலமாக காமெடியனாக இருந்தவர்கள் திடீரென ஹீரோவாக மாறிவிடுகிறார்கள். ஹீரோவாக இருந்து மக்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்கள் வில்லனாக மாறி மாஸ் காட்டி விடுகின்றனர். அப்படி ஹீரோயினாக ஜொலித்த சில நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு இயக்குனராக மாறியும் வெற்றி பெற்றிருக்கின்றனர். அப்படி எந்தெந்த நடிகைகள் இயக்குனர்களாக மாறியிருக்கின்றனர் என்பதை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

banu
பானுமதி: சினிமாவில் தலைசிறந்த பெண்மணியாக திகழ்ந்தவர் பானுமதி. நடிகையாக மட்டும் இல்லாமல் இயக்குனராக இசையமைப்பாளராக பாடகியாக தயாரிப்பாளராக என பன்முகத்திறமைகள் கொண்ட நடிகையாக இருந்தார் பானுமதி.திரையுலகில் இவரின் பங்களிப்புக்காக 2003ஆம் ஆண்டு பத்மபூசண் விருது கிடைத்தது. நடிகையாக பல சாதனைகளை பெற்ற பானுமதி இயக்குனராகவும் தனி முத்திரை பதித்தார்.
இவர் இயக்கிய முதல் படம் சந்திராணி. 1953 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற அடுத்து பெரியம்மா என்ற பெயரில் இன்னொரு படத்தையும் இயக்கினார். அதை போல ரத்னமாலா, லைலா மஜ்னு மற்றும் காதல் போன்ற படங்களையும் தயாரித்தார் பானுமதி.
லட்சுமி: 80கள் காலகட்டத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு இவர்தான் உயிர் கொடுக்க முடியும் என இவரை தவிற யாராலும் பண்ண முடியாது என்ற பிம்பத்தை உருவாக்கியவர் நடிகை லட்சுமி. தன் குரல், முகபாவனை, சிரிப்பு, அழுகை என கற்பனை கதாபாத்திரத்திற்கு உயிர்கொடுத்துவிடுவார் லட்சுமி. எவரின் சாயலும் இல்லாமல் இந்த சினிமாவில் வந்தவர் லட்சுமி. இன்று வரை இவருக்கு என தனி மரியாதையே இருந்து வருகிறது. ஸ்ரீவள்ளி என்ற படத்தின் மூலம் அறிமுகமான லட்சுமி இயக்கிய ஒரே தமிழ் படம் மழலைப்பட்டாளம். இந்தப் படத்திற்கு கதை வசனம் எழுதியவர் விசு.

rama
லட்சுமி ராமகிருஷ்ணன்: பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து சிறந்த நடிகை என்ற பெயரை வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சில படங்களை இயக்கவும் செய்திருக்கிறார். பல படங்களில் ஹீரோ , ஹீரோயின்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்த லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல சர்ச்சைகளுக்கும் ஆளானார்.
ஸ்ரீபிரியா: 80கள் காலகட்டத்தில் ரஜினி , கமலுக்கு ஆஸ்தான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. பானுமதியை போல் கேரக்டர் என்று சொல்லலாம். தைரியமான பெண்மணியாக வலம் வந்தார். அதுவரை எந்த நடிகருடனும் கிசுகிசுவில் சிக்காதவர். இப்போது கமலின் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார் ஸ்ரீபிரியா. இவரும் சில படங்களை இயக்கி வெற்றியும் பெற்றிருக்கிறார்.
தேவயாணி: 90களில் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் தேவயாணி. விஜய் அஜித் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தேவயாணி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் தலைகாட்டிய தேவயாணி இப்போது இயக்குனராகவும் களமிறங்கினார். சமீபத்தில் கூட கைக்குட்டை ராணி என்ற படத்தை இயக்கியிருக்கிறார் தேவயாணி.