எந்தத் தொழிலாக இருந்தாலும் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும். அதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும். காதலிக்க நேரமில்லை படத்தில் அனுபவம் புதுமை என்ற பாடலில் ராஜஸ்ரீ வெகு அழகாக நடித்து இருந்தார். இதை இயக்கியவர் ஸ்ரீதர்.
இந்தப்படம் இந்தியில் படமானபோது குமுத்சகானி என்ற ஒரு நடிகை ராஜஸ்ரீ நடித்த வேடத்தில் நடித்து இருந்தார். அவருக்கு அந்த ஆடை அவளுக்கு சங்கடமாக இருந்ததா, இல்லை கூச்ச சுபாவமா தெரியவில்லை. அந்தப் பாடல் காட்சி சரியாக வரவில்லை. கொஞ்ச நேரம் யோசித்து யோசித்துப் பார்த்தார் ஸ்ரீதர்.
தொடர்ந்து இந்தப் படப்பிடிப்பை நடத்தாமல் நிறுத்தினார். அதன்பிறகு அந்த நடிகையை ஒப்பந்தம் செய்த நபரிடம் இதுபற்றி விவரம் கூற, அவரும் அதற்கு அந்த நடிகைக்குப் பேசிய சம்பளத்தைக் கொடுத்து விடுங்க என்றார்.
உடனே அதற்கும் சம்மதித்து பணத்தை நடிகையிடம் கொடுத்து அனுப்பினார் ஸ்ரீதர். இதன்பிறகு வேறொரு நடிகையைத் தேடி நடிக்க வைத்தால் சரியாக வருமா என்று யோசித்தார் ஸ்ரீதர்.
உடனே தமிழில் நடித்த ராஜஸ்ரீயையே தெலுங்கிலும் நடிக்க வைத்தால் என்ன என யோசித்து அவரையே நடிக்க வைத்தார். அதே போல இந்திப் படத்திலும் ராஜஸ்ரீ தான் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் சித்ரா லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.
1964ல் ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான மாபெரும் வெற்றிச்சித்திரம் காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன், காஞ்சனா, டி.எஸ்.பாலையா, முத்துராமன், நாகேஷ், சச்சு உள்பட பலர் நடித்துள்ளனர். இது ஒரு முழுநீள நகைச்சுவைப் படம்.
அந்தக் காலத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனையும் படைத்தது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
இந்தப் படத்தில் என்ன பார்வை, மாடி மேலே, உங்கள் பொன்னான கைகள், அனுபவம் புதுமை, நாளாம் நாளாம், மலரென்ற முகமொன்று, காதலிக்க நேரமில்லை, நெஞ்சத்தை அள்ளித்தா என முத்து முத்தான பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…